தேவையான பொருட்கள் :
1. பச்சரிசி (Long grain rice) - 1 கப்
2. உளுந்தம் பருப்பு (Urdhu dhal) - 3/4 கப்
3. உப்பு (Salt) - சிறிதளவு
4. தேங்காய் பால் (Coconut milk) - 1 கப்
5. பால் (Milk) - 1 கப்
6. சக்கரை (Sugar) - தேவையான அளவு
7. ஏலக்காய் பொடி (Cardamom powder) - 1 tbsp
8. எண்ணெய் (Oil) - 1 கப்
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு mixi அல்லது grinder இல் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெயை காயவைத்து, அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெய்-இல் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், பால், சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். பின் பொரித்து வைத்துள்ள பனியாரத்தை பாலில் போடவும். ஒரு பத்து நிமிடம் நன்கு ஊறிய பிறகு பரிமாறலாம்.
சுவையான பால் பனியாரம் தயார் !!!
