Saturday, July 25, 2015

Veg.spaghetti pasta (Desi style)


தேவையான பொருட்கள் :

1. Spaghetti Pasta - 1 cup
2. வெங்காயம் -1 (chopped finely )
3. தக்காளி -2 (chopped finely )
4. தேவையானஅளவு  உப்பு  (required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers) - தலா 1 (each 1 thinly sliced)
6. எண்ணெய் (oil) - 4 tbsp
7. காளான் (Mushroom) -1/4 cup (thinly sliced )
8. பச்சை பட்டாணி (Green peas) -1/4 cup
9. பாலாடை கட்டி -1/4 cup (shredded Mozzarella cheese)
10. காரட் -1 (chopped finely)
11. Brocolli  - 1 cup  thinly sliced 
12. மிளகாய் தூள் (chilli powder) - 2 tbsp 
13. கொத்தமல்லி தூள் (corionder powder) - 1/2 tbsp 
14. மஞ்சள் தூள் (turmeric powder) - 1/4 tbsp 
15. Tomato ketchup - 2 tbsp 
16. தண்ணீர் (water) - 1 cup 

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில்  pasta, சிறிது உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் நன்கு வேகவைக்கவும். வேகவைத்த pasta வை  வடிகட்டி தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.

பிறகு கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளி, brocolli, காரட், காளான், பச்சை பட்டாணி, Green, Yellow, Red Capsicum, போட்டு வதக்கவும்.

பிறகு  உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்போட்டு நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும், பிறகு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து காய்கறிகள் வெந்த பின்பு  tomato ketchup சேர்க்கவும். இறுதியாக வேகவைத்த pasta வையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது chesse சேர்த்து பின் இரக்கவும்.

சுவையான pasta ரெடி !!!