Thursday, August 18, 2016

தேங்காய் Sweet Puffs


தேவையான பொருட்கள்:

1. Puff pastry - 1 sheet
2. சீனி (Sugar) - 1/2 cup
3. துருவிய தேங்காய் (Grated coconut) - 1/2 cup 
4. உலர்ந்த திராட்சை (Raisin) - 1/4 cup
5. முட்டை (egg ) - 1
6. மைதா மாவு (or All purpose மாவு)


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சீனி, துருவிய தேங்காய், உலர்ந்த திராட்சை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

பின் puff pastry யை சிறுது மைதா மாவை தூவி நன்கு திரட்டி (தேய்த்து) கொள்ளவும். தேய்த்த puff pastryயை 6 அல்லது 8 சதுர துண்டுகளாக்கவும்.

பிறகு சிறிது தேங்காய் கலவையை நடுவில் வைத்து pastry யை சிறிது தண்ணீர் தொட்டுக்கொண்டு மூடவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, brush வைத்து மூடியுள்ள pastry மேல் தடவவும்.

பிறகு oven யை 385 degree preheat செய்யவும். பின் 410 degree இல்  வைத்து 15 நிமிடம் bake செய்யவும்.

சுவையான தேங்காய் sweet puffs தயார் !!!

Saturday, June 4, 2016

கருவேப்பில்லை பொடி




தேவையான பொருட்கள்:

1. கருவேப்பில்லை (Curry leaves) -2 கப் (கழுவி நன்றாக காயவைக்கவும்)
2. உளுந்தம் பருப்பு (Urdu dhal) - 1 கப்
3. வரமிளகாய் (Red chilli) -7
4. கட்டிபெருங்காயம் (Asafoetida) - 2 or பெருங்கயத்தூள் 1/4 tbsp
5. உப்பு (Salt) - தேவையான அளவு (Required)
6. எண்ணெய் (oil) -2 tbsp

செய்முறை :

முதலில் கடாயை அடுப்பில் காயவைத்து உளுத்தம்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருங்காயம், வரமிளகாய், கருவேப்பில்லை, உப்பு ஆகியவற்றை தனி தனியாக வறுத்து கொள்ளவும்.


பின்பு அனைத்தும் சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

சுவையான கருவேப்பில்லை  பொடி ரெடி !!!

இந்த பொடியை சாதத்துடன் சிறிது நெய் ஊற்றி சாப்பிடலாம்  அல்லது இட்லி- தோசைக்கும் சாப்பிடலாம் .


Tuesday, May 31, 2016

புடலங்காய் வடை



தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் (1 - பொடியாக நறுக்கியது )
2. துவரம் பருப்பு (1/2 - கப்)
3. கடலை பருப்பு (1/2 - கப்)
4. வெங்காயம் (1 - பொடியாக நறுக்கியது )
5. கறிவேப்பில்லை (சிறிதளவு - பொடியாக நறுக்கியது )
6. கொத்தமல்லி (சிறிதளவு - பொடியாக நறுக்கியது )
7. இஞ்சி (சிறிதளவு - பொடியாக நறுக்கியது )
8. சோம்பு (1 - tbsp )
9. வரமிளகாய் (3)
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - 1/2 cup

செய்முறை:


முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின் மிக்சியில் ஊறவைத்த பருப்பு, இஞ்சி, சோம்பு, வரமிளகாய், உப்பு சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள மாவில் புடலங்காய், வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின் மாவை எடுத்து சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான புடலங்ககாய் வடை தயார் !!!


Monday, April 4, 2016

மட்டன் பிரியாணி



தேவையான பொருட்கள்:



1. மட்டன் - 500 gm (or 1 lbs)
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 2
3. தக்காளி (Chopped tomato) - 1
4. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 1/2 cup 
5. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப  (Required green chilli) - 2
6. இஞ்சி - பூண்டு விழுது  (Ginger - Garlic paste) - 2 tbsp 
7. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 4
8. ஏலக்காய் (Cardamom) - 2
9. கிராம்பு (Cloves) - 3
10. பிரயாணி இலை (Bay leaves) - 3
11. நெய் (Ghee) - 3 tbsp 
12. எண்ணெய் (oil) - 3 tbsp 
13. மஞ்சள் தூள் (Turmeric powder) - சிறிதளவு
14. மிளகாய்  தூள் (Chilli powder) - 1/2 tbsp
15. புதினா (Mint leaves) - 5 tbsp 
16. எலுமிச்சை சாறு (Lemon juice) - 2 tbsp 
17. உப்பு தேவைக்கேற்ப (Salt required)


செய்முறை:   

முதலில் கடாயில்  3 tbsp எண்ணெய் மற்றும் 3 tbsp நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை-பிரயாணி இலை ஆகியவற்றை போடவும். பிறகு வெங்காயம்  போட்டு வதக்கவும். 

பின் இஞ்சி பூண்டு  விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன் பின் தக்காளி, புதினா, பச்சை மிளகாய், தயிர்  சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய மட்டன்  துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். 

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா, உப்பு  சேர்த்து வதக்கவும் .பின் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு 10 விசிலுக்கு வைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்த பின் அரிசியை போடவும். பின் அதனுடன் சிறிது உப்பு  சேர்க்கவும். அரிசியை ஒரு 50 % வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

பின் குக்கரை திறந்து வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். அதன் பின் 1 tbsp எலுமிச்சை சாறையும் சேர்த்து கலந்த பின் குக்கரை மூடி, அடுப்பை சுமார் 15 நிமிடம் சிமில் (sim) வைத்து எடுத்தால் சுவையான மட்டன் பிரயாணி ரெடி !!


Tuesday, March 29, 2016

பால் பனியாரம்



தேவையான பொருட்கள் :

1. பச்சரிசி (Long grain rice)  - 1 கப் 
2. உளுந்தம் பருப்பு (Urdhu dhal) - 3/4 கப் 
3. உப்பு (Salt) - சிறிதளவு 
4. தேங்காய் பால் (Coconut milk) - 1 கப் 
5. பால் (Milk) - 1 கப் 
6. சக்கரை (Sugar)  - தேவையான அளவு 
7. ஏலக்காய் பொடி (Cardamom powder) - 1 tbsp 
8. எண்ணெய் (Oil) - 1 கப் 


செய்முறை:

முதலில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு mixi அல்லது grinder இல் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெயை காயவைத்து, அரைத்து வைத்த மாவை சிறு சிறு  உருண்டைகளாக எண்ணெய்-இல்  போட்டு பொரித்து எடுக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், பால், சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். பின் பொரித்து வைத்துள்ள பனியாரத்தை பாலில் போடவும். ஒரு பத்து நிமிடம் நன்கு ஊறிய பிறகு பரிமாறலாம். 

சுவையான பால் பனியாரம் தயார் !!!

Friday, January 8, 2016

காரட் பாயசம்



தேவையான பொருட்கள்:

1. காரட் (Carrot) - 4  (சிறு துண்டுகளாக நறுக்கியது)
2. முந்தரி பருப்பு (Cashew  nuts) - 1/2 cup
3. சர்க்கரை (Sugar) - 1 cup
4. பால் (Milk) -1 cup
5. வெள்ளரி விதைகள் (pumpkin seeds ) - 2 tbsp
6. நெய் (Ghee ) - 1 tbsp

செய்முறை:

முதலில் குக்கரில் காரட்டை வேக வைத்து எடுத்துகொள்ளவும். காரட் சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் காரட் மற்றும் முந்தரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு நன்கு கொதிக்கவிடவும், பின் அரைத்து வைத்த காரட்டை அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அதன்பின் சர்க்கரை சேர்க்கவும். பிறகு வெள்ளரி விதைகளை நெய்யில் வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும்.

சுவையான காரட் பாயசம் தயார் !!!


Thursday, August 20, 2015

மெது வடை



தேவையான பொருட்கள்:

1. உளுந்தம்  பருப்பு (Urdhu  dhal) - 1கப் 
2. பச்சை மிளகாய் (green  chilli) - 2
3. மிளகு pepper - 1 tbsp 
4. கறிவேப்பில்லை (curry leaves) - சிறிதளவு (chopped finely)  
5. வெங்காயம் (Onion) -1 (chopped finely )
6. கொத்தமல்லி (Corionder leaves) - சிறிதளவு (chopped finely)   
7. உப்பு  (Salt) - தேவையான அளவு 
8. எண்ணெய் (Oil) - 1/2 cup 

செய்முறை:

முதலில் உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின் மிக்சி அல்லது கிரைண்டர் -யில் உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், மிளகு , உப்பு,  சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் மிருதுவாக  அரைத்து கொள்ளவும்.  

பிறகு அரைத்து வைத்துள்ள மாவில் வெங்காயம், , கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின் மாவை எடுத்து சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு  எண்ணெய்யில் இட்டு  பொரித்து எடுக்கவும்.

சுவையான மெது  வடை தயார் !!!

Thursday, August 13, 2015

Kulfi icecream



தேவையான பொருட்கள்:

1. Whipped cream  - 350 gm
2. Condensed milk (சுண்டிய பால்) - 300 ml
3. Evaporated milk - 300 ml
4. குங்குமபூ saffron -1 tbsp
5. பாதம் பருப்பு -6 nos (சிறு துண்டுகளாக)

செய்முறை :

Whipped cream,  Condensed milk, Evaporated milk, நறுக்கிய பாதம் பருப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.

பிறகு freezer ' யில்  வைக்கும் பாத்திரத்தில் கலவையை ஊற்றி, அதன்மேல் குங்குமபூ தூவி ஒரு 8 மணி நேரம் freezer ' யில் வைக்கவும்.

சுவையான குளு குளு குல்பி ரெடி !!!

Saturday, July 25, 2015

Veg.spaghetti pasta (Desi style)


தேவையான பொருட்கள் :

1. Spaghetti Pasta - 1 cup
2. வெங்காயம் -1 (chopped finely )
3. தக்காளி -2 (chopped finely )
4. தேவையானஅளவு  உப்பு  (required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers) - தலா 1 (each 1 thinly sliced)
6. எண்ணெய் (oil) - 4 tbsp
7. காளான் (Mushroom) -1/4 cup (thinly sliced )
8. பச்சை பட்டாணி (Green peas) -1/4 cup
9. பாலாடை கட்டி -1/4 cup (shredded Mozzarella cheese)
10. காரட் -1 (chopped finely)
11. Brocolli  - 1 cup  thinly sliced 
12. மிளகாய் தூள் (chilli powder) - 2 tbsp 
13. கொத்தமல்லி தூள் (corionder powder) - 1/2 tbsp 
14. மஞ்சள் தூள் (turmeric powder) - 1/4 tbsp 
15. Tomato ketchup - 2 tbsp 
16. தண்ணீர் (water) - 1 cup 

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில்  pasta, சிறிது உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் நன்கு வேகவைக்கவும். வேகவைத்த pasta வை  வடிகட்டி தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.

பிறகு கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளி, brocolli, காரட், காளான், பச்சை பட்டாணி, Green, Yellow, Red Capsicum, போட்டு வதக்கவும்.

பிறகு  உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்போட்டு நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும், பிறகு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து காய்கறிகள் வெந்த பின்பு  tomato ketchup சேர்க்கவும். இறுதியாக வேகவைத்த pasta வையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது chesse சேர்த்து பின் இரக்கவும்.

சுவையான pasta ரெடி !!!

Sunday, March 1, 2015

அல்வா (Halwa)


தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு (Wheat flour) - 1 cup
2. சக்கரை (Sugar) - 1 cup
3. ஏலக்காய் தூள் (Cardamom ) - 1 tbsp
4. நெய் (Ghee) - 1/2 cup 
5. சோள மாவு (Corn flour) - 2 tbsp
6. உப்பு (Salt) -சிறிதளவு
7. தண்ணீர் (Water) -  2 cup (தேவைகேற்ப)
8. முந்திரி பருப்பு (Cashews) - 10

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். இந்த கலவை ஒரு 2 மணி நேரம் நன்கு ஊற வேண்டும்.

பின் ஒரு வடிகட்டியில் கரைத்து வைத்த கலவையை ஊற்றி வடிகட்டவும்.

ஒரு கடாயில் வடிகட்டிய கலவையை ஊற்றவும், மிதமான தீயில் வைத்து கிளறவும். 

ஒரு 5 நிமிடம் கழித்து சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பின் சோள மாவை சிறது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும். அதன் பின் நெய் ஊற்றி ஒரு 25 நிமிடம் நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து வரும்போது இரக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி முந்திரி பருப்புகளால் அலங்கரிக்கலாம்.

சுவையான அல்வா ரெடி !!!