தேவையான பொருட்கள்:
1. காரட் (Carrot) - 4 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
2. முந்தரி பருப்பு (Cashew nuts) - 1/2 cup
3. சர்க்கரை (Sugar) - 1 cup
4. பால் (Milk) -1 cup
5. வெள்ளரி விதைகள் (pumpkin seeds ) - 2 tbsp
6. நெய் (Ghee ) - 1 tbsp
செய்முறை:
முதலில் குக்கரில் காரட்டை வேக வைத்து எடுத்துகொள்ளவும். காரட் சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் காரட் மற்றும் முந்தரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு நன்கு கொதிக்கவிடவும், பின் அரைத்து வைத்த காரட்டை அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
அதன்பின் சர்க்கரை சேர்க்கவும். பிறகு வெள்ளரி விதைகளை நெய்யில் வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும்.
சுவையான காரட் பாயசம் தயார் !!!

No comments:
Post a Comment