Thursday, May 30, 2013

வாழைப்பூ வடை


தேவையான பொருட்கள் :

1. துவரம் பருப்பு(Toor dhal )  -1/2 கப்
2. கடலை பருப்பு (Bengal gram) - 1/2 கப்
3. வாழைப்பூ - சிறியது 1 (finely chopped )
4. சின்ன வெங்காயம் - 10 (finely chopped)
5. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
6. இஞ்சி (ginger) - சிறிதளவு
7. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves - finely chopped)
8. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves - finely chopped)
9. வரமிளகாய் (red chilli)- 1
10. எண்ணெய் (oil) - 2 cup
11. உப்பு (salt)- தேவையான அளவு 

செய்முறை : 

துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை ஊறவைத்து கொள்ளவும் .

பிறகு மிக்ஸ்யில்  ஊறவைத்த பருப்புகள், சோம்பு, இஞ்சி, வரமிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.

பின் அரைத்த கலவையில் வாழைப்பூ, சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில்  காயவைத்து, 2 கப் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 
சிறிது மாவை எடுத்து கொண்டு சிறிதாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும் .

சுவையான வாழைப்பூ வடை ரெடி !!!
 

தக்காளி குருமா



தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 3
2. பெரிய வெங்காயம் (chopped onion) - 1
3. வெள்ளைபூண்டு (garlic) - 1 பல் 
4. எண்ணெய் (oil) - 3 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves)
7. வர மிளகாய்  (Red chilli) - 2 
8. தேவையான அளவு  உப்பு  (required salt)
9. தேங்காய் (coconut ) - 1/2 cup 
10. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
11 பொட்டுகடலை (roasted chana) - சிறிதளவு


செய்முறை :

முதலில் தேங்காய், பொட்டுகடலை, சோம்பு, வெள்ளைபூண்டு, வர மிளகாய் இவைகளை நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன்  கருவேப்பில்லை, நன்கு நறுக்கப்பட்ட - வெங்காயம், தக்காளி,  சேர்த்து  5 நிமிடம் வதக்கவும்.

வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசிலுக்கு  வேகவைக்கவும்.  பின் குக்கரை திறந்து  அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

கொத்தமல்லி இலைகலால் அழகுபடுத்தலாம். சுவையான தக்காளி  குருமா ரெடி...  

தக்காளி குருமாவை  -  சப்பாத்தி, தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்!!! 

பருப்பு துவையல்


தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு (Toor dhal) - 1/2 கப்
தேங்காய் (Coconut ) - சிறிதளவு
வரமிளகாய் (Red chilli) - சிறியது 1
வெள்ளைபூண்டு (Garlic) - சிறியது  1
உப்பு (Salt ) - தேவையான அளவு


செய்முறை : 

கடாயை அடுப்பில் காயவைத்து, துவரம் பருப்பை சிறிது வறுத்து கொள்ளவும்.


பிறகு மிக்ஸ்யில் - வறுத்த துவரம் பருப்பு மற்றும் மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

சுவையான பருப்பு துவையல்  ரெடி !!!

அனைத்து வகையான சாதங்களுடனும் பருப்பு துவையலை சாப்பிடலாம்.

Sunday, May 26, 2013

காரட்,உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மசாலா (Mixed vegetables masala)

காரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மசாலா

2013-07-17 21.13.59.jpg
தேவையான பொருட்கள் :

1. காரட்  - 2 (சதுரமாக நறுக்கியது - carrot  cut into small square shapes)
2. உருளைக்கிழங்கு -2(சதுரமாக நறுக்கியது - potato cut into small square shapes)

3. பச்சை பட்டாணி - 1/4 கப்
4. தக்காளி (tomato) - 1 (Finely chopped)
5. பெரிய  வெங்காயம் (Onion) - 1 (Finely chopped)
6. தேவையான அளவு  உப்பு  (required salt)
7. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel seeds) - சிறிதளவு
8. சின்னசீரகம் (Cumin seeds) - சிறிதளவு
9. கடுகு (Mustard) - சிறிதளவு
10. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
11. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
12. மிளகு (Black  pepper) - சிறிதளவு
13. சாம்பார் தூள் (Sambar powder) -2 tbsp
14. எண்ணெய் (Oil) - 4 tbsp 
15. தண்ணீர் (Water) -1/4 cup 

செய்முறை :

கடாயை அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், சின்னசீரகம், கருவேப்பில்லை, பெரிய  வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, காரட், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்வதக்கிய அனைத்தையும் குக்கரில்  போட்டு மிளகாய் தூள், தேவையானஅளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.
சுவையான காய்கறி மசாலா ரெடி !!!

காய்கறி மசாலாவை - சப்பாத்தி, சாதம் இவைகளுடன் சாப்பிடலாம்...

பீட்ரூட் மசாலா (Beetroot masala)


தேவையான பொருட்கள் :

1. பீட்ரூட் - 2 (சதுரமாக நறுக்கியது - Beetroot  cut into small square shapes) 
2. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
3. தேவையானஅளவு  உப்பு (Required salt)
4. மிளகாய்  தூள் (Chilli powder) - 1 1/2 tbsp
5. கடலைபருப்பு  (Channa dhal) - 2 tbsp
6. தண்ணீர் (Water) - 1/4 cup 
7. எண்ணெய் (Oil) - 4 tbsp


செய்முறை :

கடாயை அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடலைபருப்பு,  கருவேப்பில்லை, பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 

பின் வதக்கிய அனைத்தையும் குக்கரில்  போட்டு மிளகாய் தூள், தேவையானஅளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

அருமையான பீட்ரூட் மசாலா ரெடி !!!

பீட்ரூட் மசாலாவை - சப்பாத்தி, சாதம் இவைகளுடன் சாப்பிடலாம்...

வெள்ளை பணியாரம் (Paniyaram)






தேவையான பொருட்கள் :

1. பச்சரிசி (Long grain Rice ) - 1 cup
2. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) -1/4 cup
3. உப்பு (salt ) -1/4 tbsp
4. எண்ணெய் (oil) - 1 1/2 cup

செய்முறை :

பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பிறகு உப்பு சேர்த்து ஊறவைத்த கலவையை நன்கு அரைத்துகொள்ளவும்.

கடாயை அடுப்பில் காயவைத்து, 1 1/2 கப்  எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெய்யில் ஊற்றவும். பிறகு 3 நொடி கழித்து திருப்பிவிடவும்....பின் ஜல்லி கரண்டியால்  பணியாரத்தை எடுக்கலாம்...

சுவையான வெள்ளை பணியாரம் ரெடி !!! தக்காளி சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
 
குறிப்பு : மாவை மிகவும் கெட்டியாக அரைக்க வேண்டாம், சிறுது தண்ணியாக அரைத்து கொள்ளவும். ஒருவேளை மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறுது பால் ஊற்றி கரைத்து கொள்ளலாம்.



Thursday, May 2, 2013

தக்காளி சட்னி (Tomato chutney)


தேவையான பொருட்கள் :

1. பெரிய  வெங்காயம் (Chopped onion) - 4
2. தக்காளி (Chopped tomato) - 1
3. எண்ணெய் (Oil) - 4 tbsp 
4. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு 
5. உப்பு தேவைக்கேற்ப (Salt required) 
6. புளி (Tamarind) - சிறிதளவு 
7. கடுகு (Mustard) - சிறிதளவு 
8. உளுத்தம் பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
9. வரமிளகாய் (Red chilli ) - 2

முதலில்  தக்காளி, வெங்காயம், கருவேப்பில்லை, வரமிளகாய், உப்பு, புளி போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பைப் போடவும். பின்பு அரைத்தவற்றையும் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு  கொதிக்கவிடவும்.

சுவையான தக்காளி சட்னி ரெடி !!!

தக்காளி சட்னியை - இட்லி, தோசை இவைகளுடன் சாப்பிடலாம்.

கோழிக்குழம்பு (Chicken Gravy)



தேவையான பொருட்கள் :

1. சிக்கன் (Skinless Chicken thighs ) - 1 lbs 
2. பெரிய  வெங்காயம் (Chopped onion) - 1
3. தக்காளி (Chopped tomato) - 1
4. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel Seeds) - 2 tbsp 
5. இஞ்சி - பூண்டு விழுது  (Ginger - Garlic paste) - 2 tbsp  
6. எண்ணெய் (oil) - 4 tbsp 
7.  மிளகாய்  தூள் (Chilli powder) - 3 tbsp
8. சீரகம் -2 tbsp
9. உப்பு தேவைக்கேற்ப (Salt required) 


செய்முறை :   

முதலில்  சோம்பு, சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, சிறிது வெங்காயம், மிளகாய் தூள் இவை அனைத்தையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் 3 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், மீதமிருக்கும் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். இதில் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். 

பிறகு அனைத்தையும் குக்கரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

சுவையான கோழிக்குழம்பு ரெடி!!!

தேங்காய் சட்னி (Coconut Chutney)




தேவையான பொருட்கள் :

1. தேங்காய் (coconut ) - 1/2 cup
2. கருவேப்பில்லை  (curry leaves)- சிறிதளவு
3. பச்சை மிளகாய்  (green chilli) - 2 
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. எண்ணெய் (oil) - 3 tbsp  
6. கடுகு (mustard) - சிறிதளவு
7. உளுத்தம்  பருப்பு  (urad dhal) - சிறிதளவு
8. இஞ்சி (ginger ) - சிறிதளவு
9. வெள்ளைபூண்டு (Garlic) - சிறிதளவு
செய்முறை : 

முதலில் மிக்ஸ்யில்  தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைபூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின் கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கருவேப்பில்லை, கடுகு, உளுத்தம்  பருப்பு போட்டு தாளிக்கவும். 

பின் இவற்றை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றவும். 

அருமையான தேங்காய் சட்னி ரெடி !!!

தேங்காய் சட்னியை -இட்லி ,தோசை  இவைகளுடன் சாப்பிடலாம் .