Thursday, May 30, 2013

தக்காளி குருமா



தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 3
2. பெரிய வெங்காயம் (chopped onion) - 1
3. வெள்ளைபூண்டு (garlic) - 1 பல் 
4. எண்ணெய் (oil) - 3 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves)
7. வர மிளகாய்  (Red chilli) - 2 
8. தேவையான அளவு  உப்பு  (required salt)
9. தேங்காய் (coconut ) - 1/2 cup 
10. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
11 பொட்டுகடலை (roasted chana) - சிறிதளவு


செய்முறை :

முதலில் தேங்காய், பொட்டுகடலை, சோம்பு, வெள்ளைபூண்டு, வர மிளகாய் இவைகளை நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன்  கருவேப்பில்லை, நன்கு நறுக்கப்பட்ட - வெங்காயம், தக்காளி,  சேர்த்து  5 நிமிடம் வதக்கவும்.

வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசிலுக்கு  வேகவைக்கவும்.  பின் குக்கரை திறந்து  அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

கொத்தமல்லி இலைகலால் அழகுபடுத்தலாம். சுவையான தக்காளி  குருமா ரெடி...  

தக்காளி குருமாவை  -  சப்பாத்தி, தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்!!! 

No comments:

Post a Comment