Saturday, March 29, 2014

Onion Rings


தேவையான பொருட்கள்:

1. வெங்காயம் - 1 வட்டமாக நறுக்கிகொள்ளவும் (Ring shaped)
2. சோள மாவு (Corn  flour) - 3 tbsp
3. மைதா மாவு (All purpose flour) - 3 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. இஞ்சி,பூண்டு விழுது (Ginger Garlic paste) - 1 tbsp
6. மிளகு தூள் (Pepper powder ) - 1/2 tbsp
7. தண்ணீர் (Water) - 1/4 cup
8. ரொட்டி தூள் (Bread crumbs) - தேவையான அளவு
9. எண்ணெய் (oil) - 1/2 cup


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகு தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு வட்டமாக நறுக்கிவைத்துள்ள வெங்காய துண்டுகளை, கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து கொண்டு, பின் மாவில் நனைத்து வைத்த வெங்கயா துண்டுகளை ரொட்டி தூளில் (bread crumbs) பிரட்டி எடுத்துகொள்ளவும். பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுவையான Onion Rings ரெடி!!! 



Monday, March 17, 2014

ஆப்பிள் தொக்கு (Apple thokku)


தேவையான பொருட்கள்:

1. ஆப்பிள்(Apple ) -1 (Finely grated)
2. இஞ்சி(Ginger ) -1 tbsp (Finely chopped)
3. மிளகாய்த்  தூள் (Chili powder) - 2 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. கடுகு (Mustard) - 1 tbsp
6. வெல்லம் (Jaggery) - 1 tbsp
7. வெந்தயம் (Fenugreek) - 1 tbsp
8. பெருங்காயம் (Asafoetida) - 1/2 tbsp
9. எண்ணெய் (Oil) - 4 tbsp

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த பின் கடுகை போடவும். பிறகு ஆப்பிள் மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். பின் வெல்லத்தை சேர்க்கவும். 

ஆப்பிள் நன்கு வெந்தபின், இறுதியாக பெருங்காயம் மற்றும் வெந்தயத்தை வாணலில் சிறிது வறுத்த பின் அதை பொடியாக்கவும். பின் அந்த பொடியை ஆப்பிள் உடன் சேர்த்து கிளறி இரக்கவும்.

சுவையான ஆப்பிள் தொக்கு ரெடி !!!

பால் பேடா (Milk Peda)



தேவையான பொருட்கள்:

1. கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர்  (Skim milk powder): 1 1/4 cup 
2. வெண்ணெய் (Butter un-salted): 3 tbsp 
3. குருகியப் பால் (Condensed milk): 300 ml
4. பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு (Pista or Badam)  

செய்முறை:

ஒரு மைக்ரோ இணக்கமான கிண்ணத்தில், அனைத்து மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை கலந்து கொள்ளவும். 9 முதல் 12 நிமிடங்கள் மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கவும்.

பிறகு மைக்ரோவேவ் அடுப்பில் இருந்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும்.

சிறிது ஆறிய பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் பேடாவை செய்யலாம். அல்லது Cookie cutter கொண்டு வெவ்வேறு வடிவங்களை செய்யலாம்.

பேடாவின் மேலே பாதாம் அல்லது பிஸ்தா பருப்புகளை கொண்டு அலங்கரிங்கலாம். சுவையான பால் பேடா ரெடி !!!

Thursday, March 6, 2014

அரிசி பாயசம் (Rice payasam)



தேவையான பொருட்கள்:
 
1. குருனை அரிசி - 1/4 கப்
2. பாசிப் பருப்பு - 4 tbsp
3. வெல்லம் - தேவைகேற்ப 
4. ஏலக்காய் தூள்  - 1 tbsp
5. முந்திரி பருப்பு - 2 tbsp
6. தேங்காய் துருவல் - 3 tbsp
7. தண்ணீர் - 4 கப்
8. நெய் - 2 tbsp 

செய்முறை:

முதலில் பாசிப் பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் குக்கரில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு 7 நிமிடம்  வைக்கவும். சற்று ஆறிய பின் குக்கரை திறந்து வெல்லம், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், முந்திரி பருப்பு (முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்) சேர்க்கவும்.

சுவையான அரிசி பாயசம் ரெடி !!!

காலி ப்ளோவெர் மஞ்சுரியன் (Cauliflower manchurian)


தேவையன பொருட்கள் :

1. காலிப்ளோவெர் பூ (Cauliflower florets) - 15
2. மக்காசோளம் மாவு (Corn flour) - 3 tbsp
3. All purpose flour -5 tbsp
4. Chili sauce - 2 tbsp
5. Tomato ketchup -2 tbsp
6. Soy sauce - 1 tbsp
7. உப்பு (Salt) - தேவையான அளவு 
8. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp
9. வெங்காய தாள் (Spring onion ) - 1/4 கப்
10. இஞ்சி (Ginger ) - 2 tbsp (Finely chopped )
11. பூண்டு (Garlic) - 2 tbsp (Finely  chopped )
12. பச்சை மிளகாய் (Green chili) - 2  (Finely chopped )
13. எண்ணெய் (Oil) - 1/2 கப்

மஞ்சுரியன் செய்யும் முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரில், All purpose flour, Corn flour, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும். பின் அதனுடன் காலிப்ளோவெரையும் சேர்க்கவும்.

பின்  கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் காலிப்ளோவெரை போட்டு வறுத்து எடுக்கவும்.

Sauce செய்யும் முறை:

Corn flour மாவை 1/4 கப் தண்ணீரில் கரைக்கவும். பின் அதனுடன் Chili sauce, Ketchup, Soy sauce, உப்பு சேர்க்கவும்.

பின் 3 tbsp  கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய தாள் சேர்த்து  ஒரு 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு Corn flour கலவையை  அதில் சேர்த்து  மாவு நன்கு கெட்டியாகும் வரை கிளறி இரக்கவும்.

இறுதியாக வறுத்து வைத்துள்ள காலிப்ளோவெரை சேர்த்து பிரட்டி எடுக்கவும். பின் சிறிது  வெங்காய தாள் கொண்டு அலங்கரிக்கலாம்.

சுவையான காலி ப்ளோவெர் மஞ்சுரியன் ரெடி !!!

Carrot Muffin


 தேவையான  பொருட்கள்:

1. All purpose flour - 1 cup
2. கோதுமை மாவு  (wheat flour) - 1 cup
3. முட்டை (Egg) -3
4. சர்க்கரை (Sugar) - 1 1/2 cup
5. எண்ணெய் (oil ) - 1/4 cup
6. உப்பு (Salt) - 1/2 tbsp
7. Vanilla extract - 1 tbsp
8. தயிர் (Curd) - 1/4 cup
9. காரட் (carrot ) - 1 cup (finely grated )
10. லவங்கபட்டை தூள் (cinnamon powder ) - 1tbsp
11.Baking cups  
12. உலர்ந்த திராட்சை (raisin ) - 1/4 cup
13.Baking powder - 1 tbsp 

செய்முறை:

முதலில் Convention oven யை 365'Fக்கு 10 நிமிடம் preheat செய்யவும்.

ஒரு  பாத்திரத்தில்  கோதுமை மாவு, All purpose flour, உப்பு, லவங்கபட்டை தூள்,Baking powder சேர்த்து கலக்கவும்.

பின் வேறு ஒரு  பாத்திரத்தில் எண்ணெய்,சர்க்கரை சேர்த்து hand mixer இல் நன்கு கலக்கவும். பின் முட்டை சேர்த்து கலக்கவும் (முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்).

அதன் பின் மேலே கலந்த கலவையையும்  சேர்க்கவும். பின் Vanilla extract, தயிர் சேர்க்கவும். 

இறுதியாக உலர்ந்த திராட்சை மற்றும் காரட் சேர்க்கவும்.

பின் muffin trayஇல் baking cups வைத்து, மேலே கிளறிய மாவை கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு cup 'யிலும் ஊற்றவும்.

Convention oven இல் 385'F 20 நிமிடம் bake செய்யவும்...

சுவையான carrot muffin ரெடி !!!