Thursday, October 31, 2013

Tortilla Rollups


தேவையான பொருட்கள்:

1. Tortilla - 2
2. Herbed  cream  cheese - 1/2 cup
3. மிளகு தூள்  (Pepper   powder ) - 1 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. வெங்காய தாள் (Spring onion) - 1/2 cup (Finely chopped)
6. சிவரிக் கீரை (Celery)  - 1/2 cup (Finely chopped)
7. குடை மிளகாய் (சிவுப்பு & பச்சை) - (Bell peppers red & green) - 1 cup (Finely  chopped)


செய்முறை :

முதலில் வெங்காய தாள், சிவரிக் கீரை, குடை மிளகாய் இவற்றுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு cheese யும் சேர்த்து  கிளறவும்.

பிறகு Tortilla இல் மேலே கிளறிய கலவையை ஒரு கரண்டியை கொண்டு சீராக அதன் மேல் தடவவும். பின் அதை இறுக்கமாக சுருட்டவும் (Roll it tightly).

பின்பு குளிர் சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும். பிறகு அதை சிறிது  சிறிது துண்டுகளாக வெட்டவும்.

சுவையான Tortilla Rollups ரெடி !!!

(Appetizer ஆக Tortilla Rollups பயன் படுத்தலாம். Red chilli sauce உடன் சாப்பிடலாம்)

Saturday, October 26, 2013

Apple Walnut Muffin


தேவையான  பொருட்கள்:

1. All purpose flour - 1 3/4 cup
2. முட்டை (Egg) -2
3. Walnut - 1/2 cup
4. ஆப்பிள் (Apple) - 1/2 cup
5. வெண்ணெய் (Butter) - 1/2 cup
6. சர்க்கரை (Sugar) - 1 1/4 cup
7. Baking powder - 1 tbsp
8. உப்பு (Salt) - 1/2 tbsp
9. Vanilla extract - 1 tbsp
10. Baking cups  


செய்முறை:

முதலில் Convention oven யை 365'Fக்கு 10 நிமிடம் preheat செய்யவும்.

Walnut மற்றும் ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய், உப்பு, சர்க்கரை அனைத்தையும் சேர்த்து hand mixer இல் நன்கு கலக்கவும். பின் All purpose flour, முட்டை சேர்த்து கலக்கவும். (முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்).

பிறகு Vanilla extract, baking powder, நறுக்கிய Walnut மற்றும் ஆப்பிள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

பின் muffin trayஇல் baking cups வைத்து, மேலே கிளறிய மாவை கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு cup 'யிலும் ஊற்றவும்.

Convention oven இல் 375'F 30 நிமிடம் bake செய்யவும்...

சுவையான Apple Walnut Muffin ரெடி!!!

Thursday, October 10, 2013

Cream Puffs


தேவையான பொருட்கள்:
1. All purpose flour - 1 cup
2. வெண்ணெய்(Butter) -1/4 cup
3. தண்ணீர்(water) 200 ml - 1 cup
4. சர்க்கரை (sugar) -1cup
5. உப்பு (salt) - 1 சிட்டிகை (1pinch)
6.முட்டை (Egg) -2
7.whip cream -250 ml

Cream செய்முறை:
whip cream மற்றும் சர்க்கரை சேர்த்து hand mixer இல் நன்றாக கலக்கவும்.

Puff செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். பின்அதனுடன் All purpose flour, உப்பு,1tbsp சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கவும். நன்கு ஆறியபிறகு ஒவ்வொரு முட்டையாக கிளறிய மாவில் சேர்க்கவும்.

பின் convention oven இல் வைக்கும் தட்டில் காகிததோல் (parchment paper ) போட்டு 2tbsp அளவுக்கு மாவை எடுத்து அதில் வைக்கவும்.
 
முதலில் oven ஐ 375'F வைத்து 15 நிமிடம் bake செய்யவும்.பின்பு 325'F வைத்து 15 நிமிடம் bake செய்யவும்.

Baked Puff ஐ கத்தியால் இரண்டாக வெட்டி கொள்ளவும். ஒரு பாகத்தின் மேல் cream இ வைத்து இன்னொரு பாகத்தினால் மேல வைத்து மூடவும்.

தேவைப்பட்டால் சிறிது decors மூலம் அலங்கரிக்கலாம்...

சுவையான Cream Puffs ரெடி!!!

Lemon short bread cookies



தேவையான பொருட்கள்:


1. All purpose flour - 1 cup
2. வெண்ணெய்(Butter) -1/2 cup
3. சமையல் சோடா(Baking powder) -1 tbsp
4. சர்க்கரை (sugar) -1/4cup
5. உப்பு (salt) - 1 சிட்டிகை (1pinch)
6. Vanilla extract -1 tbsp
7. Heavy cream - 3 tbsp
8. எலுமிச்சை பழத்தின்தோல் (Zest of lemon) -1tbsp

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எலுமிச்சை பழத்தின்தோல் இரண்டையும் சேர்த்து கலக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் flour, வெண்ணெய், சமையல் சோடா, உப்பு சேர்த்து hand mixer ஆல் கலக்கவும். பின் மேலே கலந்த கலவை, cream, vanilla extract அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும்.

சேர்த்த மாவை நன்றாக திரட்டி கொண்டு, சிறு சிறு சதுரங்களாக வெட்டலாம். அல்லது cookie cutter மூலம் வேண்டிய வடிவங்களில் வெட்டி கொள்ளவும்.

பின் convention oven இல் வைக்கும் தட்டில், காகிததோல் (parchment paper ) போட்டு வெட்டிய துண்டுகளை எடுத்து அதில் வைக்கவும்.

முதலில் oven 5நிமிடம் preheat செய்யவும். பின் 375'F 15 -20 நிமிடம் வைத்து bake செய்யவேண்டும்.

சுவையான Lemon short bread cookies ரெடி!!!

Sunday, October 6, 2013

Fritters


தேவையான பொருட்கள்:

1. All purpose flour - 1 cup
2. வெண்ணெய்(Butter) -1/4 cup
3. தண்ணீர்(water) 200 ml - 1 cup
4. சர்க்கரை (sugar) -25 gram
5. எலுமிச்சை பழத்தின்தோல் (Zest of lemon) -1
6. உப்பு (salt) - 1 சிட்டிகை (1pinch)
7. முட்டை (Egg) - 3
8. Icing sugar - 1/4 cup
9. எண்ணெய் (oil) - 1/2 cup
10. உலர்ந்த திராட்சை (Rasin ) - 20

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெண்ணெய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சை பழத்தின் தோல் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். பின்அதனுடன் All purpose flour, உலர்ந்த திராட்சை சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கவும்.

நன்கு ஆறியபிறகு ஒவ்வொரு முட்டையாக கிளறிய மாவில் சேர்க்கவும். சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

பொறித்த உருண்டைகள் மேல் Icing sugar தூவி பரிமாறவும்.

சுவையான Fritters ரெடி!!!
 

Thursday, October 3, 2013

Butter Cookies


தேவையான பொருட்கள்:

1. Salted butter -1 lbs
2. Berry sugar - 1 cup
3. All purpose flour - 4 cup

செய்முறை:

முதலில் Convention Oven ஐ 300'F இல் 15 நிமிடம் pre-heat செய்யவும்.
Convention Oven இல் வைக்கும் ஒரு தட்டில் Parchment Paper போட்டு தயாராக வைக்கவும்.

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அந்த மாவை Rolling Pin வைத்து தேய்க்கவும். பின் அதில் Cookie Cutter வைத்து வெட்டவும். இப்பொழுது வெட்டிய துண்டுகளை தயாராக இருக்கும் தட்டிற்கு மாற்றவும்.

பிறகு Oven இல் 350' F க்கு 35-40 நிமிடம் Bake செய்யவும். சுவையான Butter Cookies ரெடி!!!

பூரண கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்:

1. அரிசி மாவு (Rice flour) - 1 cup
2. வெல்லம் (Jaggery) - 1/2 cup 
3. கடலை பருப்பு (Channa dhal) - 3/4 cup
4.ஏலக்காய் (Cardamom) - 2 (Finely powdered) 
5. உப்பு (Salt ) - 1/2 tbsp
6. தண்ணீர் (Warm water) - 1/2 cup
7. எண்ணைய் (Oil) -3 tbsp

செய்முறை :

முதலில் குக்கரில் கடலை பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பூரணம் தயார்.

பிறகு அரிசி மாவில், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். பின் அதில் இருந்து கொஞ்சம் மாவை எடுத்துக்கொண்டு, சிறு உருண்டையாக உருட்டவும். பின் அதை தட்டையாக தட்டி, 1/2 tbsp பூரணத்தை வைத்து மூடவும்.

பிறகு இட்லி பாத்திரத்தில் 7 to 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்...
சுவையான பூரண கொழுக்கட்டை ரெடி!!!