தேவையான பொருட்கள்:
1. கருவேப்பில்லை (Curry leaves) -2 கப் (கழுவி நன்றாக காயவைக்கவும்)
2. உளுந்தம் பருப்பு (Urdu dhal) - 1 கப்
3. வரமிளகாய் (Red chilli) -7
4. கட்டிபெருங்காயம் (Asafoetida) - 2 or பெருங்கயத்தூள் 1/4 tbsp
5. உப்பு (Salt) - தேவையான அளவு (Required)
6. எண்ணெய் (oil) -2 tbsp
செய்முறை :
முதலில் கடாயை அடுப்பில் காயவைத்து உளுத்தம்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருங்காயம், வரமிளகாய், கருவேப்பில்லை, உப்பு ஆகியவற்றை தனி தனியாக வறுத்து கொள்ளவும்.

பின்பு அனைத்தும் சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
சுவையான கருவேப்பில்லை பொடி ரெடி !!!
இந்த பொடியை சாதத்துடன் சிறிது நெய் ஊற்றி சாப்பிடலாம் அல்லது இட்லி- தோசைக்கும் சாப்பிடலாம் .
