Wednesday, July 23, 2014

இட்லி கபாப் (Idly Kabab)


தேவையான பொருட்கள்:

1. இட்லி (Idly) - 5 (cut into cubes)
2. குடமிளகாய் (Bell peppers Green & Red) - each one cut into cubes
3. வெங்காயம் (Onion) - 1 cut  into cubes
4. தயிர் (Curd) - 1 cup
5. மிளகாய் தூள் (Chilli powder) - 2 tbsp
6. கொத்தமல்லி தூள் (Coriander powder) -1 tbsp
7. கரம் மசாலா (Garam masala) - 1 tbsp
8. உப்பு (Salt ) - 1 சிட்டிகை
9. சக்கரை (Sugar) - 1 tbsp

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, உப்பு, சக்கரை அனைத்தையும் நன்கு கலக்கவும். பிறகு இட்லி துண்டுகளை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பிறகு ஒரு tooth pick இல் குடமிளகாய், இட்லி, வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

Baking oven இல்  tooth pick  இல் சேர்த்து வைத்ததை ஒரு தட்டில் வைத்து 385'F 15-25  நிமிடங்கள் bake செய்யவும் .

சுவையான இட்லி கபாப் ரெடி !!!

Orange Loaf


தேவையான பொருட்கள்:

1. All purpose flour -1 1/2 cup
2. முட்டை (Egg) - 2 nos.
3. சமையல் சோடா (Baking powder) - 1 tbsp
4. உப்பு (Salt) - 1 pinch
5. சர்க்கரை (Sugar) - 1 cup
6. வெண்ணெய் (Butter) - 1/4 cup
7. ஆரஞ்சு பழத்தின் தோல் (Zest of  orange) - 1 no.
8. ஆரஞ்சு சாறு (Orange juice) - 3/4 cup
9. பாதம் பருப்பு (Almonds) - 10 nos (Cut into small pieces)

செய்முறை:

முதலில் convention oven யை 360 degree க்கு 10 நிமிடம் pre-heat செய்யவும்.


ஒரு பாத்திரத்தில் All purpose flour, சமையல் சோடா, உப்பு, சர்க்கரை, ஆரஞ்சு பழத்தின் தோல் ஆகியவற்றை நன்கு கலக்கவும்.

பிறகு முட்டை, வெண்ணெய், ஆரஞ்சு சாறு  இவற்றை நன்றாக (use whisk or hand mixer) கலக்கவும்.

Loaf baking பாத்திரத்தில் கலந்த கலவையை ஊற்றி convention oven இல் 375 க்கு 30-45 நிமிடம் வைக்கவும்.

சுவையான orange loaf ரெடி !!!

தேன்குழல் (முறுக்கு)


தேவையான பொருட்கள்:

1. பச்சரிசி(Long grain rice) - 4 cup

2. உளுந்தம் பருப்பு (Urdhu dhal) - 1 1/2 cup

3. உப்பு (Salt) - தேவையான அளவு

4. எண்ணை (Oil) - 1 cup

5. தண்ணீர் (Water) - 1/2 cup

செய்முறை :

முதலில் கடாயில் உளுந்தம் பருப்பை போட்டு சிறிது சூடு வரும் வரை வறுக்கவும். பின்  பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பையும் சேர்த்து அரைத்து வைத்துகொள்ளவும்.


பின் சிறிது அரைத்து வைத்துள்ள மாவை எடுத்து, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் - முறுக்கு பிழியும் கட்டையில் வைத்து பிழிந்து, நன்கு வெந்தபின் எடுக்கவும்.

சுவையான செட்டிநாடு தேன்குழல்  தயார் !!!

Monday, July 7, 2014

Bell Pepper Stir Fry


தேவையான பொருட்கள்:

1. குடமிளகாய் (Bell peppers) - Green, Yellow, Red each one  (Finely   diced)
2. வெங்காயம் (Onion)  - 1 (Finely diced)
3. தக்காளி (Tomato)  - 1 (Finely diced)
4. பச்சை மிளகாய் (Green Chilli)  - 1 (Finely chopped)
5. வெள்ளரிகாய் (Cucumber)  - 1 (Finely diced)
6. Chat Masala - 1 tbsp 
7. எலுமிச்சை சாறு(Lemon juice) - 1 tbsp 
8. உலர்ந்த திராட்சை (Raisin)  - 2 tbsp 
9. உப்பு (Salt) - தேவையான அளவு 
10. கொத்தமல்லி இலை (Cilantro) - 1 tbsp
11. எண்ணெய் (Oil) - 4 tbsp  

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். 

அதன் பிறகு குட மிளகாய்களை சேர்கவும். பிறகு chat மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறவும், பின் எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிகாய், உப்பு சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இரக்கவும். 

அதன் பின் உலர்ந்த திராட்சை சேர்த்து கிளறி - கொத்தமல்லி இலைகளால் அழகு படுத்தலாம்.

சுவையான Bell Pepper Stir Fry தயார் !!