Tuesday, August 20, 2013

செட்டிநாடு மசால பனியாரம் (Chettinad Masala Paniyaram)



தேவையான பொருட்கள்:

1. பச்சரிசி (White long grain rice ) - 1 cup
2. உளுந்தம் பருப்பு (Urdhu dhal ) - 1 cup
3. உப்பு (Salt ) - தேவையான அளவு
4. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு (finely chopped)
5. கொத்தமல்லி (Coriander) - சிறிதளவு (finely chopped)
6. கடுகு (Mustard) - 1 tbsp
7. எண்ணெய் (Oil) - 1 1/2 cup
8. தண்ணீர் (Water) - 1/2 cup 

செய்முறை:

முதலில்  பச்சரிசி மற்றும் உளுந்தம்பருப்பு இவை இரண்டையும் நன்கு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு மிக்ஸ்யில் மிருதுவாக உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும்.

கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வதக்கிய கலவையை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

கடாயில் 1 1/2 cup எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் மாவை சிறு, சிறு  உருண்டைகளாக போடவும். நன்கு பொன்னிறம்மாக வந்தவுடன் எடுக்கவும்.

சுவையான செட்டிநாடு மசால பனியாரம் ரெடி !!!

Zucchini loaf


தேவையான பொருட்கள்:

1. சீமை சுரக்காய் (Zucchini)  - 1 (peeled & finely grated)
2. All-purpose flour - 1 1/2 cup
3. முட்டை (Egg) - 2 nos.
4. இலவங்கப்பட்டை பொடி (Cinnamon powder) - 1 tbsp
5. சமையல் சோடா (Baking powder) - 1 tbsp
6. உப்பு (Salt) - 1 pinch
7. எண்ணெய் (oil) - 11/4 cup
8. சர்க்கரை (Sugar) - 1 cup

செய்முறை:

முதலில் convention oven யை 360 degree க்கு 10 நிமிடம் pre-heat செய்யவும்.


ஒரு பாத்திரத்தில் All purpose flour, சமையல் சோடா, உப்பு, இலவங்கப்பட்டைபொடி ஆகியவற்றை நன்கு கலக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், சர்க்கரை இவற்றை நன்றாக (use whisk or hand mixer) கலக்கவும். பின் Zucchini சேர்க்கவும்.

பிறகு முதலில்  கலந்த  கலவையையும் இதனுடன் சேர்க்கவும்.

Loaf baking பாத்திரத்தில் கலந்த கலவையை ஊற்றி convention oven இல் 375 க்கு 30-35 நிமிடம் வைக்கவும்.

சுவையான Zucchini loaf ரெடி !!!