Monday, July 29, 2013

குழிபனியாரம் (Sweet and Salt Paniyaram)



தேவையான பொருட்கள் :

1. புழுங்கல் பொன்னி அரிசி (Ponni rice) - 1 cup
2. பச்சரிசி (Long grain rice) - 1 cup
3. வெந்தயம் (Fenugreek) -2 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. கடுகு (Mustard) - 1 tbsp
6. உளுந்தம் பருப்பு (Uradu dal) - 1/2 cup
7. பச்சை மிளகாய் (Green chilli ) - 1 Finely chopped
8. வெல்லம்  (Jaggery) - 3/4 cup (கெட்டியான பாகு காய்ச்சி கொள்ளவும் )
9. ஏலக்காய் (Cardamom) - 2 Finely powdered
10. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு (Finely chopped)
11. கொத்தமல்லி (Coriander leaves) - சிறிதளவு (Finely chopped)
12. தேங்காய் (Coconut) - 1/4 cup (Finely grated)
13. எண்ணெய் (Oil) -1/4 cup

செய்முறை:

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் அனைத்தையும் 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு மிக்ஸ்யில் ஊறவைத்த கலவை, உப்பு, தண்ணீர் சேர்த்து  நன்கு மிருதுவாக அரைத்துகொள்ளவும்.

இனிப்பு பனியாரத்துக்கு  அரைத்த மாவை சிறிது எடுத்துக்கொண்டு அதில் வெல்ல பாகு, ஏலக்காய், தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு குழிபனியாரம் பாத்திரத்தில் உள்ள குழியில் ஊற்றவும். நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.

கார பனியாரத்துக்கு அரைத்த மாவை சிறிது எடுத்துக்கொண்டு,
பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பில்லை, பச்சைமிளகாய், கொத்தமல்லி  போட்டு 3 நிமிடம் வதக்கவும். வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

பிறகு குழிபனியாரம் பாத்திரத்தில் உள்ள குழியில் ஊற்றவும்.நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான குழிபனியாரம் ரெடி !!!

Creamy Broccoli soup

Photo: Sunday special - Creamy broccoli soup...

தேவையான பொருட்கள் :

1. செலெரி (Celery stick) -1
2. காரட் (Carrot ) -1 Finely  chopped
3. வெங்காயம் (Onion ) - 1 Finely chopped
4. Broccoli -1/4 cup
5. Olive oil -2 tbsp
6. Cheddar cheese sauce - 4 tbsp
7. Chicken or vegetable broth -10 oz (1 can)

செய்முறை:

முதலில் கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், வெங்காயம் , காரட், செலெரி இவை மூன்றையும் நன்கு ஒரு 3 நிமிடம் வதக்கவும்.

பின் Chicken broth யை ஊற்றி 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். சிறிது நேரம் ஆறிய பிறகு இந்த கலவையை மிக்ஸ்யில் மிருதுவாக அரைத்து கொள்ளவும்.

பிறகு கடாயில் இந்த அரைத்த கலவையை ஊற்றி, 4 tbsp Cheddar cheese sauce கலக்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு Broccoli யை சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

சுவையான Creamy Broccoli soup ரெடி !!! 

Mango Mousse


தேவையான பொருட்கள் :

1. மாம்பழம் (Mango) -1
2. சக்கரை (Sugar) - தேவையான அளவு
3. Creamy cheese - 2 tbsp
4. Sour cream - 4 tbsp
5. கேசரி பவுடர் (Kesari powder ) - சிறிதளவு
6. ஏலக்காய் (Cardamom) - 1 Finely powdered
7. பிஸ்தா (Pista) - சிறிதளவு - cut into small pieces
8. உலர் கனிகள் (Dry Fruits) - சிறிதளவு

செய்முறை :

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி, சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்ஸ்யில் (or Food processor ) மாம்பழ துண்டுகள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

பின்பு அதனுடன் Cheese, Sourcream, கேசரிபவுடர், ஏலக்காய், பிஸ்தா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துகொண்டு, குளிர் சாதன பெட்டியில் ஒரு 2 மணி நேரம் வைக்கவும்.

பின் பரிமாறும்போது, அலங்காரத்திற்காக சிறிது உலர் கனிகள் (Dry Fruits) சேர்க்கலாம்.

சுவையான Mango Mousse ரெடி !!!

Friday, July 26, 2013

Chicken Manchurian ( Dry )




தேவையான பொருட்கள் :

1. கோழி (Chicken breast pieces ) - 1/2 cup
2. மைதா மாவு (All purpose flour ) - 3/4 cup
3. Soya sauce - 3 tbsp
4. முட்டை (only egg white) - 1
5. உப்பு (salt) - தேவையான அளவு
6. மிளகு தூள் (pepper powder ) - 1 tbsp
7. எண்ணெய் (oil )- 3/4 cup
8. வெள்ளைபூண்டு (Garlic) - 10 பல் (cut into small pieces )
9. வெங்காயம் (onion ) -1 (cut into square shapes )
10. குடமிளகாய் (Green bell pepper ) -1 (cut into square shapes )
11. வெங்காயதாள் (spring onion ) - (Finely chopped the base part & cut upper part into big pieces)
12. பச்சை மிளகாய் (Green chilli ) - 2 (Finely chopped)
13. White vinegar - 1 tbsp
14. Tomato sauce - 2 tbsp

செய்முறை :
முதலில் கோழியை நன்கு சுத்தபடுத்தி வைத்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 tbsp soya sauce, மிளகு தூள், மைதா , முட்டை (வெள்ளை கரு) சிறிது உப்பு, மற்றும் கோழியையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் - மேலே கலந்த கலவையை சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 1tbsp soya sauce ஊற்றவும்.

பின் பூண்டு போட்டு வதக்கவும். அதன் பின் வெங்காயம், குடமிளகாய், வெங்காயதாள், பச்சைமிளகாய் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கவும். பின்பு 1 tbsp white vinegar ஊற்றவும்.

பிறகு பொறித்த கோழியை இதனுடன் சேர்க்கவும். இறுதியாக 2 tbsp Tomato sauce சேர்த்து நன்கு saute செய்யவும்.

பின்குறிப்பு : சிறிது Gravy யாக வேண்டும் என்றால் 1/2 cup தண்ணீரில் 1 tbsp cornflour மாவு கலந்து அதில் ஊற்றி (saute செய்வதற்கு பதில்) ஒரு 3 நிமிடம் கொதிக்கவிடலாம்.

இட்லிபொடி (Idly podi)

தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு (Toor dhal ) - 1 cup
2. உளுத்தம்பருப்பு (Urad dhal ) -1 cup
3. கருவேப்பில்லை (Curry leaves ) -சிறிதளவு
4. வரமிளகாய் (Red chilli ) -10
5. கட்டிபெருங்காயம் (Asafoetida) - 2 or பெருங்கயத்தூள் 1/4 tbsp
6. உப்பு (Salt ) - தேவையான அளவு (Required salt)
7. எண்ணெய் (oil ) -3 tbsp

செய்முறை :
முதலில் கடாயை அடுப்பில் காயவைத்து உளுத்தம்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பின்பு கடாயில் 1 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருங்காயம், வரமிளகாய், கருவேப்பில்லை, உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பின்பு அனைத்தும் சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

சுவையான இட்லி பொடி ரெடி !!!

இட்லி பொடியை - தோசை, இட்லி, கொழுக்கட்டை இவைகளுடன் சாப்பிடலாம்..!!

பிடிகொழுக்கட்டை (Kozhukattai)


தேவையான பொருட்கள் :

1. புழுங்கல் பொன்னி அரிசி (ponni rice) -1 cup
2. உப்பு (salt ) -தேவையான அளவு (required salt)
3. கடுகு (Mustard ) -1 tbsp
4. வரமிளகாய் (Red chilli ) -1
5. தேங்காய் (coconut ) - 1/4 cup (Finely grated )
6. தண்ணீர் (water ) -1/2 cup
7. எண்ணெய் (oil ) -2 tbspகடாயில்
8. கருவேப்பில்லை (curry leaves ) -சிறிதளவு

செய்முறை :

முதலில் அரிசியை 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு மிக்ஸ்யில் அரிசி ,உப்பு ,தண்ணீர் சேர்த்து  நன்கு மிருதுவாக அரைத்துகொள்ளவும்.

பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கடுகு, வரமிளகாய், கருவேப்பில்லை, தேங்காய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பின்பு அரைத்த மாவையும் சேர்த்து நன்றாக ஒரு 5 நிமிடம் வதக்கவும்.

பின்பு இட்லி தட்டில் மாவை பிடித்து வைக்கவும். நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.  சுவையான கொழுக்கட்டை ரெடி !!!

கொழுகட்டையை மாலையில் சிற்றுண்டியாக சாப்பிடலாம். கொழுகட்டைக்கு இட்லி பொடி தொட்டு சாப்பிடலாம்.

பச்சை பட்டாணி புலாவ்(Peas pulao)




தேவையான பொருட்கள் :

1. பச்சை பட்டாணி (Green Peas) - 1/2 cup
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 1
3. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 cup
4. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப (Required green chilli) - 2
5. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel Seeds) - 2 tbsp
6. இஞ்சி - பூண்டு விழுது (Ginger - Garlic paste) - 2 tbsp
7. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 2
8. ஏலக்காய் (Cardamom) - 2
9. கிராம்பு (Cloves) - 3
10. பிரயாணி இலை (Bay leaves) - 3
11. நெய் (Ghee) - 3 tbsp
12. எண்ணெய் (oil) - 3 tbsp
13. புதினா (Mint leaves) - 2tbsp
14. கொத்தமல்லி (Coriander leaves) -2 tbsp
15. உப்பு தேவைக்கேற்ப (Salt required)

செய்முறை:

முதலில் சோம்பு , இஞ்சி - பூண்டு விழுது இவை இரண்டையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் 3 tbsp எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை பிரயாணி இலை ஆகியவற்றை போடவும்.

பிறகு வெங்காயம், பட்டாணி,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். இதில் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

குக்கரில் பாசுமதி அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கிய கலவையை இதனுடன் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அதன்மேல் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு விசிலுக்கு குக்கரில் வைக்கவும். ஒரு விசில் வந்த பின், அடுப்பை குறைக்கவும் (keep it in sim), பின் 7 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!

Tuesday, July 23, 2013

Vegetable Fried Rice




தேவையானபொருட்கள்:

1. பெரிய வெங்காயம் (Chopped onion) - 1
2. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 cup
3. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப (Required green chilli) - 2
4. நெய் (Ghee) - 2 tbsp
5. எண்ணெய் (Oil) - 3 tbsp
6. முட்டைகோஸ் (Cabbage) (Finely chopped ) -1/4 cup பிறகு
7. பீன்ஸ் (Beans) finely chopped - 5
8. காரட் (Carrot) finely chopped - 2
9. குடை மிளகாய் (Capsicum) finely sliced - 1
10. உப்பு (salt ) தேவைக்கேற்ப
11. Soya sauce - 2 tbsp
12. Ajinomotto - 1 tbsp

செய்முறை:


குக்கரில் பாசுமதி அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசிலுக்கு வைத்து பிறகு 7 நிமிடம் கழித்து இறக்கவும்.

கடாயில் 3 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காரட், குடை மிளகாய் அனைத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு soya sauce, ajinomotto, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .

வேகவைத்த பாஸ்மதி சாதத்தை ஒரு பெரிய தட்டில் போட்டு சிறிது நெய் சேர்க்கவும். பின்பு வதக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.

சுவையான Fried Rice ரெடி !!! 

Cheese Cake



தேவையான பொருட்கள்:

1. Philadelphia Cheese -500gm
2. Sour cream -100 gm
3. Vanilla extract -1 tbsp
4. Sugar -1 1/3 cup
5. Egg (முட்டை) -2
6. Cookies crumbs -3/4 cup
7. Butter -5 tbsp
8. Strawberry or blueberry jam -2 tbsp

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் cookies crumbs, butter, 1/3 cup sugar சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.

பின்பு சற்று அகலமான convention oven பாத்திரத்தில் கலந்தகலவையை 325 F வைத்து 10 நிமிடம் bake செய்யவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் Cheese போட்டு நன்றாக whisk மூலம் கலக்கவும். பின்பு முட்டையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கலக்கவும். பின்பு 1 cup sugar, vanilla extract போட்டு நன்கு கலக்கவும். இறுதியாக sour cream சேர்த்து கலக்கவும்.

Bake செய்த cookies crumbs  மேல் மேற்களந்த அனைத்தையும் சமமாக ஊற்றவும்.
பின்பு convention oven இல் 350 F 30-40 நிமிடம் வைக்கவும்.

Bake செய்து முடித்தவுடன் 10 நிமிடம் வெளியில் எடுத்து வைக்கவும். பின்பு குளிர் சாதன பெட்டியில் 4 மணி நேரம் வைக்கவும்.

பிறகு வெளியில் எடுத்து அலங்காரத்திற்காக சிறிது strawberry jam ஊற்றலாம்.

சுவையான  Cheese Cake ready!!!