Friday, July 26, 2013

பச்சை பட்டாணி புலாவ்(Peas pulao)




தேவையான பொருட்கள் :

1. பச்சை பட்டாணி (Green Peas) - 1/2 cup
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 1
3. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 cup
4. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப (Required green chilli) - 2
5. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel Seeds) - 2 tbsp
6. இஞ்சி - பூண்டு விழுது (Ginger - Garlic paste) - 2 tbsp
7. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 2
8. ஏலக்காய் (Cardamom) - 2
9. கிராம்பு (Cloves) - 3
10. பிரயாணி இலை (Bay leaves) - 3
11. நெய் (Ghee) - 3 tbsp
12. எண்ணெய் (oil) - 3 tbsp
13. புதினா (Mint leaves) - 2tbsp
14. கொத்தமல்லி (Coriander leaves) -2 tbsp
15. உப்பு தேவைக்கேற்ப (Salt required)

செய்முறை:

முதலில் சோம்பு , இஞ்சி - பூண்டு விழுது இவை இரண்டையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் 3 tbsp எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை பிரயாணி இலை ஆகியவற்றை போடவும்.

பிறகு வெங்காயம், பட்டாணி,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். இதில் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

குக்கரில் பாசுமதி அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கிய கலவையை இதனுடன் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அதன்மேல் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு விசிலுக்கு குக்கரில் வைக்கவும். ஒரு விசில் வந்த பின், அடுப்பை குறைக்கவும் (keep it in sim), பின் 7 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!

No comments:

Post a Comment