Friday, July 26, 2013

பிடிகொழுக்கட்டை (Kozhukattai)


தேவையான பொருட்கள் :

1. புழுங்கல் பொன்னி அரிசி (ponni rice) -1 cup
2. உப்பு (salt ) -தேவையான அளவு (required salt)
3. கடுகு (Mustard ) -1 tbsp
4. வரமிளகாய் (Red chilli ) -1
5. தேங்காய் (coconut ) - 1/4 cup (Finely grated )
6. தண்ணீர் (water ) -1/2 cup
7. எண்ணெய் (oil ) -2 tbspகடாயில்
8. கருவேப்பில்லை (curry leaves ) -சிறிதளவு

செய்முறை :

முதலில் அரிசியை 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு மிக்ஸ்யில் அரிசி ,உப்பு ,தண்ணீர் சேர்த்து  நன்கு மிருதுவாக அரைத்துகொள்ளவும்.

பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கடுகு, வரமிளகாய், கருவேப்பில்லை, தேங்காய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பின்பு அரைத்த மாவையும் சேர்த்து நன்றாக ஒரு 5 நிமிடம் வதக்கவும்.

பின்பு இட்லி தட்டில் மாவை பிடித்து வைக்கவும். நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.  சுவையான கொழுக்கட்டை ரெடி !!!

கொழுகட்டையை மாலையில் சிற்றுண்டியாக சாப்பிடலாம். கொழுகட்டைக்கு இட்லி பொடி தொட்டு சாப்பிடலாம்.

No comments:

Post a Comment