தேவையான பொருட்கள் :
1. மாம்பழம் (Mango) -1
2. சக்கரை (Sugar) - தேவையான அளவு
3. Creamy cheese - 2 tbsp
4. Sour cream - 4 tbsp
5. கேசரி பவுடர் (Kesari powder ) - சிறிதளவு
6. ஏலக்காய் (Cardamom) - 1 Finely powdered
7. பிஸ்தா (Pista) - சிறிதளவு - cut into small pieces
8. உலர் கனிகள் (Dry Fruits) - சிறிதளவு
செய்முறை :
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி, சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்ஸ்யில் (or Food processor ) மாம்பழ துண்டுகள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
பின்பு அதனுடன் Cheese, Sourcream, கேசரிபவுடர், ஏலக்காய், பிஸ்தா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துகொண்டு, குளிர் சாதன பெட்டியில் ஒரு 2 மணி நேரம் வைக்கவும்.
பின் பரிமாறும்போது, அலங்காரத்திற்காக சிறிது உலர் கனிகள் (Dry Fruits) சேர்க்கலாம்.
சுவையான Mango Mousse ரெடி !!!

No comments:
Post a Comment