Monday, April 29, 2013

சிக்கன் பிரியாணி (Chicken Biryani)





பரிமாறலளவு (serving) - 3 to 4 guest 

தேவையான பொருட்கள் :

1. சிக்கன் (Skinless Chicken thighs ) - 1 lbs 
2. பெரிய  வெங்காயம் (Chopped onion) - 1
3. தக்காளி (Chopped tomato) - 1
4. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 1/2 cup 
5. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப  (Required green chilli) - 2
6. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel Seeds) - 2 tbsp 
7. இஞ்சி - பூண்டு விழுது  (Ginger - Garlic paste) - 2 tbsp 
8. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 4
9. ஏலக்காய் (Cardamom) - 2
10. கிராம்பு (Cloves) - 3
11. பிரயாணி இலை (Bay leaves) - 3
12. நெய் (Ghee) - 3 tbsp 
13. எண்ணெய் (oil) - 3 tbsp 
14. மஞ்சள் தூள் (Turmeric powder) - சிறிதளவு
15. மிளகாய்  தூள் (Chilli powder) - 1/2 tbsp
16. புதினா (Mint leaves) - 5 tbsp 
17. எலுமிச்சை சாறு (Lemon juice) - 2 tbsp 
18. உப்பு தேவைக்கேற்ப (Salt required)



செய்முறை :   

முதலில்  சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது இவை மூன்றையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில்  3 tbsp எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை-பிரயாணி இலை ஆகியவற்றை போடவும். 

பிறகு வெங்காயம்,  2 tbsp புதினா, தக்காளியை போட்டு வதக்கவும். இதில் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.

குக்கரில் பாசுமதி அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கிய கலவையை இதனுடன் சேர்க்கவும்.  பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய்  தூள், மஞ்சள் தூளையும் கலக்கவும்.

அதன்மேல் 3tbsp புதினா, 2 tbsp எலுமிச்சை சாறையும் சேர்த்து ஒரு விசிலுக்கு குக்கரில் வைக்கவும். 

ஒரு விசில் வந்த பின், அடுப்பை குறைக்கவும் (keep it in sim), பின்  7 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

பிறகு கொத்தமல்லி அல்லது புதினா இழைகளால்  அலங்கரிக்கவும்.

சுவையான சிக்கன் பிரயாணி ரெடி !!
  

Thursday, April 25, 2013

பன்னீர் மசாலா (Paneer masala)



தேவையான பொருட்கள் :

1. பெரிய  வெங்காயம் (Chopped onion) - 1
2. தக்காளி (Chopped tomato) - 1
3. மிளகாய்  தூள் (Chilli powder) - 1 1/2 tbsp
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers ) - தலா 1 (each 1)
6. கரம்மசாலா - சிறிதளவு
7. Soya sauce - சிறிதளவு
8. Tomato sauce - சிறிதளவு
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (Oil) - 4 tbsp
11. பன்னீர் - 150 gm


செய்முறை:

கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கவும்.

பின் குடமிளகாய்களை சேர்த்து வதக்கவும். பிறகு கரம்மசாலா, உப்பு, மிளகாய்தூள் சேர்க்கவும்.

அதன் பிறகு  பன்னீரை சேர்க்கவும். கடைசியாக Soya sauce, Tomato sauce சேர்த்து 10-12 நிமிடம் கழித்து பன்னீர் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சுவையான பன்னீர்  மசாலா ரெடி !!!

பனீர் மசாலாவை - சப்பாத்தி, தோசை, Tortilla இவைகளுடன் சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு வறுவல் (Potato fry)


தேவையான பொருட்கள் :

1. உருளைக்கிழங்கு - 4 (சதுரமாக நறுக்கியது - Potato cut into small square shapes)
2. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
3. தேவையானஅளவு  உப்பு (required salt)
4. மிளகாய்  தூள் (Chilli powder) - 1 1/2 tbsp
5. கடுகு (Mustard) - சிறிதளவு
6. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
 7. எண்ணெய் (Oil) - 6 tbsp

செய்முறை :

கடாயை (pan) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்  பருப்பு,  கருவேப்பில்லை, உருளைகிழங்கை போடவும். பிறகு மிளகாய்  தூள், உப்பு சேர்த்து நன்கு ஒரு 15 நிமிடம் வதக்கவும். அருமையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி !!!

உருளைக்கிழங்கு வறுவலை - சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம்  இவைகளுடன் சாப்பிடலாம் ...

வெண்டைகாய் சாம்பார் (Ladys finger / Okra sambar)


தேவையான பொருட்கள் :

1. சின்ன  வெங்காயம் (Chopped Onion) - 6
2. தக்காளி (Tomato) - 1
3. மிளகாய்  தூள் (Chilli Powder) - 1 1/2 tbsp
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. புளி  (Tamarind) - சிறிதளவு
6. கடுகு (Mustard) - சிறிதளவு
7. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
8. துவரம்பருப்பு (Toor dhal) - 1/4 கப்
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (Oil) - 4 tbsp
11. பெருங்கயாத்தூள் - சிறிதளவு
12. வெண்டைகாய் (Ladys finger / Okra) - 5
13. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு


செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும்.

கடாயை (pan) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்  பருப்பு,  கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெண்டைகாய், பெருங்கயாத்தூள் அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்கவும்.

பின் அனைத்தையும் வேகவைத்த பருப்புடன் குக்கரில்  போட்டு, ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து ஊற்றவும். பிறகு மிளகாய் தூளை போட்டு குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

கொத்தமல்லிதழைகளால்  அலங்கரிக்கவும் . அருமையான  வெண்டைகாய்  சாம்பார் ரெடி!!


வெண்டைகாய் சாம்பாரை   -   தோசை, இட்லி, சாதம்  இவைகளுடன் சாப்பிடலாம்...

ரசம் (Rasam)




தேவையான பொருட்கள் :


1. தக்காளி (Tomato) - 1
2. வரமிளகாய் (Red Chilli - split  into  2 pieces ) -1
3. தேவையான அளவு  உப்பு  (Required Salt)
4. புளி  (Tamarind) - சிறிதளவு
5. கடுகு (Mustard) - சிறிதளவு
6. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
7. மிளகு (Black  pepper) - சிறிதளவு
8. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
9.  எண்ணெய் (Oil) - 3 tbsp
10. வெள்ளை பூண்டு (Garlic) -1 பல்
11. மிளகு & சீரகத்தூள் (Black  pepper and Jeera  powder) - 1 tbsp
12. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு

செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும்.

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்  பருப்பு, மிளகு, கருவேப்பில்லை, வரமிளகாய், தக்காளி,சேர்கவும்.

ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து  ஊற்றவும். நன்கு  கொதித்தவுடன் மிளகு, சீரகத்தூள் மற்றும் வெள்ளை பூண்டை தட்டி போடவும்.

பிறகு கொத்தமல்லிதழைகளால்  அலங்கரிக்கவும். அருமையான ரசம் ரெடி !!!

Sunday, April 21, 2013

வெங்காய கோஸ் (Onion Gravy)




தேவையான பொருட்கள் :

1. பெரிய வெங்காயம் (chopped onion) - 2
2. தக்காளி (tomato) - 1
3. மிளகாய்  தூள் (chilli powder) - 1 1/2 tbsp
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. புளி  (Tamarind) - சிறிதளவு
6. கடுகு (mustard) - சிறிதளவு
7. உளுத்தம்  பருப்பு  (urad dhal) - சிறிதளவு
8. மிளகு (Black  pepper) - சிறிதளவு
9. கருவேப்பில்லை (curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (oil) - 4 tbsp

செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். 

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்  பருப்பு, மிளகு, கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்கவும். பின் அனைத்தையும் குக்கரில்  போட்டு, ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து  ஊற்றவும்.
பிறகு மிளகாய் தூளை போட்டு குக்கரில் 5 விசிலுக்கு வைக்கவும். அருமையான வெங்காய கோஸ் 
ரெடி!!

வெங்காய கோசை  -   தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...

தேங்காய் துவையல் (Coconut chutney)



தேவையான பொருட்கள் :

1. தேங்காய் (coconut ) - 1/2 cup
2. சின்ன  வெங்காயம் (sambar  onion) -10
3. எண்ணெய் (oil) - 5 tbsp
4. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
5. பச்சை மிளகாய்  (green chilli) - 2 
6. தேவையான அளவு  உப்பு  (required salt)
7. புளி  (Tamarind) - சிறிதளவு
8. கடுகு (mustard) - சிறிதளவு
9. உளுத்தம்  பருப்பு  (urad dhal) - சிறிதளவு

செய்முறை : 

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு சிறுது நேரம் சூடு ஆறிய பின் வதக்கிய அனைத்தையும் மிக்சி-யில் அரைத்தால் தேங்காய் துவையல் ரெடி!!.

அனைத்து வகையான சாதங்களுடனும், மற்றும் தோசை, இட்லி இவைகளுடன் தேங்காய் துவையலை சாப்பிடலாம்..  

கத்திரிக்காய் முருங்கைகாய் காரக் குழம்பு (Brinjal-Drumstick Spicy Gravy)



தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 1
2. சின்ன  வெங்காயம் (sambar onion) - 6
3. வெள்ளைபூண்டு (garlic) - 4பல் 
4. நல் எண்ணெய் (oil) - 4 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. புளி  (Tamarind) - சிறிதளவு
7. தேவையான அளவு  உப்பு  (required salt)
8. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
9. சின்னசீரகம் (cumin seeds) - சிறிதளவு
10. கடுகு (mustard) - சிறிதளவு
11. உளுத்தம்  பருப்பு  (urad dhal) - சிறிதளவு
12. மிளகு (Black  pepper) - சிறிதளவு
13. கத்திரிக்காய் (brinjal) - 2
14. முருங்கைகாய் (drumstick) - 1
15. சாம்பார் தூள் (sambar powder) -2 tbsp 

செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். 

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சின்னசீரகம், உளுத்தம்  பருப்பு, மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெள்ளைபூண்டு, கத்திரிக்காய் மற்றும் முருங்கைகாய் அனைத்தையும் 5 நிமிடம் வதக்கி, பின் ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து  ஊற்றவும்.

பின்னர் சாம்பார்தூள் போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். அருமையான செட்டிநாட்டுக் காரக் குழம்பு ரெடி!!

காரக் குழம்பை - சாதம், தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...

காய்கறி குருமா (Vegetable kuruma)


தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 1
2. பெரிய வெங்காயம் (chopped onion) -1
3. வெள்ளைபூண்டு (garlic) - 1 பல் 
4. எண்ணெய் (oil) - 3 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves)
7. பச்சை மிளகாய்  (green chilli) - 2 
8. தேவையான அளவு  உப்பு  (required salt)
9. தேங்காய் (coconut ) - 1/2 cup 
10. பீன்ஸ் (beans) - 4
11. காரட் (carrot) - 1
12. பச்சை பட்டாணி (green peas) -1/4 cup 
13. உருளைக்கிழங்கு (potato) - 2
14. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
15. பொட்டுகடலை (roasted chana) - சிறிதளவு

செய்முறை :

முதலில் தேங்காய், பொட்டுகடலை, சோம்பு, வெள்ளைபூண்டு, பச்சைமிளகாய் இவைகளை நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன்  கருவேப்பில்லை, நன்கு நறுக்கப்பட்ட - வெங்காயம், தக்காளி, பீன்ஸ்,காரட்,பச்சைபட்டாணி, மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து  5 நிமிடம் வதக்கவும்.

வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசிலுக்கு  வேகவைக்கவும்.  காய்கறிகள் வெந்தபின் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

கொத்தமல்லி இலைகலால் அழகுபடுத்தலாம். சுவையான காய்கறி குருமா ரெடி...  

காய்கறி குருமாவை   -  சப்பாத்தி ,தோசை,இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்!!! 


Saturday, April 20, 2013

தக்காளி தொக்கு (Tomato gravy)


தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 5
2. பெரிய வெங்காயம் (chopped onion) - 2
3. வெள்ளைபூண்டு (garlic) -2 பல் 
4. எண்ணெய் (oil) - 5 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves)
7. மிளகாய்  தூள் (chilli powder) - 2 tbsp
8. தேவையான அளவு  உப்பு  (required salt)

செய்முறை :
முதலில் தக்காளியை வேகவைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். 

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன்  கருவேப்பில்லை, நன்கு  நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு சேர்த்து  5 நிமிடம் வதக்கவும். பிறகு மசித்த தக்காளியை அதில்  சேர்த்து வதக்கவும்.

அதில்  மிளகாய்  தூள், தேவையான அளவு  உப்பு சேர்த்து - 15 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். கொத்தமல்லி இலைகலால்  அழகுபடுத்தலாம். சுவையான தக்காளி தொக்கு ரெடி...

தக்காளி தொக்கை -  சாதம் ,சப்பாத்தி ,தோசை,இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்!!!  




பால்கோவா (Paalkova)





தேவையான பொருட்கள் :

1. கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர்  (skim milk powder) : 200 gm
2. சீனி (sugar) : 8 tbsp
3. வெண்ணெய் (butter) : 125 gm
4. குருகியப் பால் (condensed milk) : 350 ml
5. ரிகோட்ட பாலாடைக்கட்டி (ricotta cheese) : 450 gm

செய்முறை :

ஒரு மைக்ரோவேவ்  இணக்கமான கிண்ணத்தில், அனைத்து மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை கலந்து கொள்ளவும் . 12 முதல் 15 நிமிடங்கள் மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து எடுக்கவும் .

சுவையான பால்கோவா ரெடி !! பாதாம் துண்டுகள் கொண்டு அழகுபடுத்தலாம்..

நீங்கள் சுமார் 10 விருந்தினருக்கு இந்த இனிப்பை பரிமாற முடியும்..

கவனத்திற்கு (note) : கிண்ணம் பெரிதும் ஆழமாகவும் இருக்க வேண்டும்.