Thursday, June 27, 2013

மீன் குழம்பு (Fish curry)



தேவையான பொருட்கள் :

1. தக்காளி (Tomato) - 1
2. சின்ன வெங்காயம் (Sambar onion) - 6
3. வெள்ளைபூண்டு (Garlic) - 4பல் 
4. நல்லெண்ணெய் (Oil) - 4 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (Curry leaves)
6. புளி  (Tamarind) - சிறிதளவு
7. தேவையான அளவு  உப்பு  (required salt)
8. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel seeds) - சிறிதளவு
9. சின்னசீரகம் (Cumin seeds) - சிறிதளவு
10. கடுகு (Mustard) - சிறிதளவு
11. வெந்தயம் (Fenugreek ) -சிறிதளவு 
12. மிளகு (Black  pepper) - சிறிதளவு
13. மீன் (Fish) - 6 துண்டுகள் (6 pieces) 
15. சாம்பார் தூள் (Sambar powder) -3 tbsp 

செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். 

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 6 ஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சின்னசீரகம் ,வெந்தயம் , மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெள்ளைபூண்டு, அனைத்தையும் 5 நிமிடம் வதக்கி, பின் ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து  ஊற்றவும்.

பின்னர் சாம்பார்தூள் போட்டு 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மீனையும் சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

அருமையான மீன்  குழம்பு ரெடி!!

மீன்  குழம்பை - சாதம், தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...

வெண்டைகாய் பச்சடி


தேவையான பொருட்கள் :

1. சின்ன  வெங்காயம் (Chopped Onion) - 4
2. தக்காளி (Tomato) - 1
3. பச்சை மிளகாய்   (Green Chilli) - 1 
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. புளி (Tamarind) - சிறிதளவு
6. கடுகு (Mustard) - சிறிதளவு
7. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
8. துவரம்பருப்பு (Toor dhal) - 1/4 கப்
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (Oil) - 4 tbsp

11. வெண்டைகாய் (Lady's finger / Okra) -10  ( finely chopped )
12. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு


செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும்.

கடாயை (pan) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்  பருப்பு,  கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெண்டைகாய்  அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்கவும்.

பின் அனைத்தையும் வேகவைத்த பருப்புடன் குக்கரில்  போட்டு, ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து ஊற்றவும். பிறகு  குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

கொத்தமல்லிதழைகளால்  அலங்கரிக்கவும். அருமையான  வெண்டைகாய் பச்சடி ரெடி!!


வெண்டைகாய் பச்சடியை  சாதத்துடன் சாப்பிடலாம்

கந்தரப்பம் (Kandrappam)





தேவையான பொருட்கள் :

1. பச்சரிசி (Long grain Rice ) - 1 cup
2. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) -1/4 cup
3. வெந்தயம் (Fenu greek ) - 2 tbs 
4. எண்ணெய் (Oil) - 1 1/2 cup
5. வெல்லம் (Jaggery ) 3/4 cup
6. ஏலக்காய் (Cardamom) - 2 


செய்முறை :

பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மூன்றையும்  சேர்த்து 3 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பிறகு  ஊறவைத்த கலவையை நன்கு அரைத்துகொள்ளவும். பின்பு அதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.

கடாயை அடுப்பில் காயவைத்து, 1 1/2 கப்  எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெய்யில் ஊற்றவும். பிறகு 3 நொடி கழித்து திருப்பிவிடவும்....பின் ஜல்லி கரண்டியால்  பணியாரத்தை எடுக்கலாம்...

சுவையான கந்தரப்பம் ரெடி !!!
 

Vegetable Pasta



தேவையான பொருட்கள் :

1. Pasta - 1 cup
2. கற்பூரவள்ளி (Oregano) - 1 tbsp
3. மிளகுதூள் (Pepper powder) - 1 tbsp
4. தேவையானஅளவு  உப்பு  (Required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers ) - தலா 1 (each 1 thinly sliced )
6. எண்ணெய் (Oil) - 4 tbsp
7. காளான் (Mushroom ) -1/4 cup (thinly sliced )
8. பச்சை பட்டாணி (Green peas ) -1/4 cup
9. பாலாடை கட்டி -1/4 cup (shredded Mozzarella cheese)
10. Sauce - (White or red - Alfredo or tomato ) -1/4 cup
11. சீமைச் சுரைக்காய்  (Zucchini) - 1 thinly sliced 

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில்  pasta, சிறிது உப்பு ,1 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் நன்கு வேகவைக்கவும்.
வேகவைத்த pasta வை  வடிகட்டி தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.

பிறகு கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 
 காளான், பச்சை பட்டாணி, Green, Yellow, Red Capsicum, சீமைச் சுரைக்காய் போட்டு வதக்கவும்.

பிறகு  உப்பு, மிளகுதூள், oregano போட்டு நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும்.....

ஒரு baking பாத்திரத்தில் வேக வைத்த pasta ,அதற்கு மேல்  காய்கறி கலவை, அதன்மேல் sauce (white or red), அதற்கு மேல் cheese  போட்டு  baking oven- இல்  20 நிமிடதிற்கு 350 F வைக்கவும்.

சுவையான pasta ரெடி !!!