Monday, November 11, 2013

சிக்கன் மசாலா (Chicken Masala)


தேவையான பொருட்கள்:

1. சிக்கன் (Chicken breast) - 1 lbs 
2. பெரிய  வெங்காயம் (Chopped onion) - 2
3. தக்காளி சாறு (Crushed tomato) - 3
4. ஏலக்காய் (Cardamom) - 1
5. இஞ்சி - பூண்டு விழுது  (Ginger - Garlic paste) - 2 tbsp  
6. எண்ணெய் (oil) - 4 tbsp 
7. மிளகாய் தூள் (Chilli powder) - 3 tbsp
8. கிராம்பு (Cloves) - 4
9. உப்பு தேவைக்கேற்ப (Salt required) 
10. பிரின்ஜி இலை (Bay leaves) - 2
11. மிளகு (Pepper corns) - 1/4 tbsp
12. கொத்தமல்லி தூள் (Coriander powder) - 1/4 tbsp
13. கரம் மசாலா (Garam masala) -1/4 tbsp
14. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
15. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/4 tbsp
16. கொத்தமல்லி தழை (Coriander leaves) -சிறிதளவு 

செய்முறை: 

முதலில் கடாயில் 2tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன்,  மிளகு, பிரின்ஜி இலை, ஏலக்காய் சேர்த்து சிறிது வதக்கவும். பின் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து -  வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

அதன் பின் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலா, தக்காளி சாறு சேர்த்து  எண்ணெய் பிரியும் வரை  வதக்கவும்.

பிறகு வதக்கிய கலவை சற்று ஆறிய பிறகு மிக்ஸ்யில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 
மறுபடியும் கடாயில் 2tbsp எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கருவேப்பில்லை மற்றும் அரைத்த கலவையை ஊற்றவும். பின் அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து  ஒரு 5நிமிடம் வதக்கவும். பின் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும், பிறகு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து
நன்கு வதக்கவும்.

சிக்கன் நன்கு வெந்தபின் - சிறிது கொத்தமல்லி தழைகளால் அலங்கரிக்கலாம்.

சுவையான Chicken Masala ரெடி!!!

கொத்து பரோட்டா (Kothu Parota)


தேவையான பொருட்கள்:

1. பரோட்டா - 3 (Cut into small pieces)
2. வெங்காயம் - 2 (Finely chopped)
3. தக்காளி - 1 (Finely chopped)
4. பச்சை மிளகாய் - 1 (Finely chopped)
5. உப்பு (Salt) - தேவையான அளவு
6. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp
7. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
8. முட்டை (Egg) - 2
9. எண்ணெய் (Oil) - 3 tbsp

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 5நிமிடம் வதக்கவும். பின் அதனுடன் பரோட்டா சேர்த்து வதக்கவும். பிறகு முட்டையும் சேர்க்கவும். இறுதியாக மிளகு தூள் சேர்த்து கிளறி இரக்கவும்.

சுவையான கொத்து பரோட்டா ரெடி !!!

சௌச் சௌ கூட்டு (Chayote curry)



தேவையான பொருட்கள்:

1. சௌச் சௌ (chayote) -1 (Cut into small pieces)
2. தக்காளி (Tomato ) - 1 (Finely chopped)
3. மிளகாய் தூள் (Chilli powder) - 1/2 tbsp
4. வெங்காயம் (Onion) - 1/4 cup (Finely chopped)
5. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
6. உளுத்தம்  பருப்பு (Urad dhal) - சிறிதளவு
7. சீரகம் (Cumin seeds ) - சிறிதளவு
8. எண்ணெய் (Oil) - 3 tbsp  
9. பாசிப்பருப்பு (Moong dal) - 4 tbsp
10. கடலை  பருப்பு (Chana dal) - 4 tbsp
11. உப்பு (Salt) - தேவையான அளவு
12. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/4 tbsp
 13. தண்ணீர் (Water) - 1/2 cup

செய்முறை:

முதலில் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் கடலை  பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக்  கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பில்லை, தக்காளி, வெங்காயம், சௌச் சௌ அனைத்தையும் சேர்த்து ஓரு 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு உப்பு மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து ஒரு 3 விசிலுக்கு வைக்கவும்.

சுவையான சௌச் சௌ கூட்டு ரெடி !!!

Sunday, November 10, 2013

பன்னீர் பக்கோடா (Paneer Pakoda)


தேவையான பொருட்கள்:

1. பன்னீர்  - 125 gm (cut into small cubes)
2. மிளகாய் தூள் (Chilli powder) - 1 tbsp
3. மிளகு தூள் -1/2 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு ( Required amount )
5. Corn flour - 6 tbsp
6. All purpose flour -3 tbsp
7. தண்ணீர் (Water) - 1 cup
8. எண்ணெய் (Oil) - 1/2 cup

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 cup தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பன்னீர் சேர்த்து ஒரு 5 நிமிடம்  கொதிக்க வைக்கவும். பின்பு அதை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் corn flour, All purpose flour, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும். பின் அதனுடன் பன்னீர் சேர்த்து கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் பன்னீ ரை போட்டு பொறித்து எடுக்கவும்.

சுவையான பன்னீர்  பக்கோடா ரெடி !!!