Monday, November 11, 2013

சௌச் சௌ கூட்டு (Chayote curry)



தேவையான பொருட்கள்:

1. சௌச் சௌ (chayote) -1 (Cut into small pieces)
2. தக்காளி (Tomato ) - 1 (Finely chopped)
3. மிளகாய் தூள் (Chilli powder) - 1/2 tbsp
4. வெங்காயம் (Onion) - 1/4 cup (Finely chopped)
5. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
6. உளுத்தம்  பருப்பு (Urad dhal) - சிறிதளவு
7. சீரகம் (Cumin seeds ) - சிறிதளவு
8. எண்ணெய் (Oil) - 3 tbsp  
9. பாசிப்பருப்பு (Moong dal) - 4 tbsp
10. கடலை  பருப்பு (Chana dal) - 4 tbsp
11. உப்பு (Salt) - தேவையான அளவு
12. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/4 tbsp
 13. தண்ணீர் (Water) - 1/2 cup

செய்முறை:

முதலில் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் கடலை  பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக்  கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பில்லை, தக்காளி, வெங்காயம், சௌச் சௌ அனைத்தையும் சேர்த்து ஓரு 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு வதக்கிய அனைத்தையும் குக்கரில் போட்டு உப்பு மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து ஒரு 3 விசிலுக்கு வைக்கவும்.

சுவையான சௌச் சௌ கூட்டு ரெடி !!!

No comments:

Post a Comment