தேவையான பொருட்கள்:
1. Puff pastry - 1 sheet
2. சீனி (Sugar) - 1/2 cup
3. துருவிய தேங்காய் (Grated coconut) - 1/2 cup
4. உலர்ந்த திராட்சை (Raisin) - 1/4 cup
5. முட்டை (egg ) - 1
6. மைதா மாவு (or All purpose மாவு)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சீனி, துருவிய தேங்காய், உலர்ந்த திராட்சை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
பின் puff pastry யை சிறுது மைதா மாவை தூவி நன்கு திரட்டி (தேய்த்து) கொள்ளவும். தேய்த்த puff pastryயை 6 அல்லது 8 சதுர துண்டுகளாக்கவும்.
பிறகு சிறிது தேங்காய் கலவையை நடுவில் வைத்து pastry யை சிறிது தண்ணீர் தொட்டுக்கொண்டு மூடவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, brush வைத்து மூடியுள்ள pastry மேல் தடவவும்.
பிறகு oven யை 385 degree preheat செய்யவும். பின் 410 degree இல் வைத்து 15 நிமிடம் bake செய்யவும்.
சுவையான தேங்காய் sweet puffs தயார் !!!






