தேவையான பொருட்கள்:
1. பரோட்டா (Parota) - 3 (Cut into small pieces)
2. வெங்காயம் (Onion) - 1 (Finely diced)
3. தக்காளி (Tomato) - 1 (Finely chopped)
4. பச்சை மிளகாய் (Green chilli)- 2 (Finely chopped)
5. உப்பு (Salt) - தேவையான அளவு
6. கொத்த மல்லித் தூள் (Coriander powder) - 1 tbsp
7. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
8. மிளகாய் தூள் (Chili powder) - 1 tbsp
9. எண்ணெய் (Oil) - 3 tbsp
10. Chilli sauce - 1tbsp
11. சிகப்பு உணவு நிறம் (Red Food color) - 1tbsp
12. குடமிளகாய் (Green capsicum) - 1 (Finely diced)
13. இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste) - 1 tbsp
14. கொத்தமல்லி இலைகள் (Coriander leaves) - சிறிதளவு
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கருவேப்பில்லை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கொத்த மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு, chilli sauce சேர்த்து நன்கு ஒரு 5 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் பரோட்டா மற்றும் Red Food color சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் சிறிது கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கலாம்.
சுவையான சில்லி பரோட்டா ரெடி !!!