Monday, September 30, 2013

பாகற்காய் சிப்ஸ் (Bitter gourd chips)


தேவையான பொருட்கள்:

1. பாகற்காய் - 2 (thinly sliced)
2. மிளகாய் தூள் -2 tbsp
3. உப்பு (Salt) - தேவையான அளவு 
4. மஞ்சள் தூள் -1 pinch 
5. எண்ணெய் (Oil) - 1/2 cup

செய்முறை:

முதலில் பாகற்காய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஊறவைக்கவும்.

பின் கடாயை (pan) அடுப்பில்  காயவைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஊறவைத்த பாகற்காயை போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி !!!

காரட் அல்வா (Carrot Halwa)



தேவையான பொருட்கள் :

1. காரட் - 4 (Finely grated)
2. சர்க்கரை (Sugar) - 1 cup
3. Milk powder or Ricotta cheese -1/4 cup
4. ஏலக்காய் (Cardamom) - 2 Finely powdered
5. முந்திரி பருப்பு  (Cashews) -10
6. உலர்ந்த திராட்சை (Raisins) -10
7. பால் (Milk) - 2 cup
8. Food color Red - 1/4 tbsp
9. நெய் (Ghee) - 4 tbsp

செய்முறை:

முதலில் கடாயில் நெய் ஊற்றி, காய்ந்தவுடன், காரட்டை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் பால் மற்றும் Milk powder / Ricotta cheese சேர்த்து நன்கு பால் வற்றும் வரை 10 நிமிடம் கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து ஒரு 7 நிமிடம் நன்கு கிளறவும். 

முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் தனியாக வறுத்துக் கொள்ளவும்.


இறுதியாக ஏலக்காய், வறுத்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும். 

சுவையான காரட் அல்வா ரெடி !!!

Sunday, September 8, 2013

தயிர் சாதம் (Curd Rice)


தேவையான பொருட்கள்:

1. பொன்னி புழுங்கல் அரிசி - 1 cup
2. தயிர் (Curd) - 400 கிராம்
3. பால் (Milk ) - 1 cup
4. தண்ணீர் (Water) -1/2 cup
5. உப்பு (Salt) - தேவையான அளவு
6. காரட் (Carrot) -1 (Finely grated)
7. மாதுளம் பழம் (Pomegranate) - 1/2
8. கடுகு (Mustard ) -1 tbsp
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. இஞ்சி (Ginger) - சிறிதளவு (Finely chopped )
11. பச்சை மிளகாய் (Green chili) -2 (Finely chopped)
12. எண்ணெய் (Oil) - 2 tbsp
13. கொத்தமல்லி இலைகள் (Coriander leaves) - சிறிதளவு 


செய்முறை:

முதலில் குக்கரில்  அரிசியை போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு விசிலுக்கு வைக்கவும். பின் அடுப்பை குறைத்து (Sim) 15நிமிடம்  வைக்கவும்.

சாதம் நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும். பின்பு அதில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் அதில் காரட், மாதுளம்பழம் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய்  ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கடுகு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.

பிறகு  தாளித்தவற்றையும்  சாதத்துடன் கலக்கவும்.

இறுதியில் சிறிது மாதுளம்பழம், கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கலாம்.

சுவையான தயிர் சாதம்ரெடி !!

கேசரி


தேவையான பொருட்கள்:

1. ரவை (Sooji ) - 1 cup
2. முந்திரி பருப்பு (Cashews) - 10
3. உலர்ந்த திராட்சை (Rasin ) - 10
4. தண்ணீர் (Water) - 4 cup
5. சக்கரை (Sugar) - 3/4 cup 
6. Food color - orange - 1tbsp
7. பாதாம் பருப்பு (Almonds) - 4 (Finely grated)
8. நெய் (Ghee) - 1/4 cup 


செய்முறை:

முதலில் கடாயில் நெய் ஊற்றி, காய்ந்தவுடன் முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை போட்டு வறுக்கவும். பின் ரவையை சேர்க்கவும், 2 நிமிடம் கழித்து  தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து  சக்கரை சேர்க்கவும். இறுதியாக Food color யை சேர்க்கவும்.

பின் சிறிது பாதாம் பருப்பால் அலங்கரிக்கலாம்.

சுவையான கேசரி ரெடி !!