Thursday, August 20, 2015

மெது வடை



தேவையான பொருட்கள்:

1. உளுந்தம்  பருப்பு (Urdhu  dhal) - 1கப் 
2. பச்சை மிளகாய் (green  chilli) - 2
3. மிளகு pepper - 1 tbsp 
4. கறிவேப்பில்லை (curry leaves) - சிறிதளவு (chopped finely)  
5. வெங்காயம் (Onion) -1 (chopped finely )
6. கொத்தமல்லி (Corionder leaves) - சிறிதளவு (chopped finely)   
7. உப்பு  (Salt) - தேவையான அளவு 
8. எண்ணெய் (Oil) - 1/2 cup 

செய்முறை:

முதலில் உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின் மிக்சி அல்லது கிரைண்டர் -யில் உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், மிளகு , உப்பு,  சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் மிருதுவாக  அரைத்து கொள்ளவும்.  

பிறகு அரைத்து வைத்துள்ள மாவில் வெங்காயம், , கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின் மாவை எடுத்து சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு  எண்ணெய்யில் இட்டு  பொரித்து எடுக்கவும்.

சுவையான மெது  வடை தயார் !!!

Thursday, August 13, 2015

Kulfi icecream



தேவையான பொருட்கள்:

1. Whipped cream  - 350 gm
2. Condensed milk (சுண்டிய பால்) - 300 ml
3. Evaporated milk - 300 ml
4. குங்குமபூ saffron -1 tbsp
5. பாதம் பருப்பு -6 nos (சிறு துண்டுகளாக)

செய்முறை :

Whipped cream,  Condensed milk, Evaporated milk, நறுக்கிய பாதம் பருப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.

பிறகு freezer ' யில்  வைக்கும் பாத்திரத்தில் கலவையை ஊற்றி, அதன்மேல் குங்குமபூ தூவி ஒரு 8 மணி நேரம் freezer ' யில் வைக்கவும்.

சுவையான குளு குளு குல்பி ரெடி !!!

Saturday, July 25, 2015

Veg.spaghetti pasta (Desi style)


தேவையான பொருட்கள் :

1. Spaghetti Pasta - 1 cup
2. வெங்காயம் -1 (chopped finely )
3. தக்காளி -2 (chopped finely )
4. தேவையானஅளவு  உப்பு  (required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers) - தலா 1 (each 1 thinly sliced)
6. எண்ணெய் (oil) - 4 tbsp
7. காளான் (Mushroom) -1/4 cup (thinly sliced )
8. பச்சை பட்டாணி (Green peas) -1/4 cup
9. பாலாடை கட்டி -1/4 cup (shredded Mozzarella cheese)
10. காரட் -1 (chopped finely)
11. Brocolli  - 1 cup  thinly sliced 
12. மிளகாய் தூள் (chilli powder) - 2 tbsp 
13. கொத்தமல்லி தூள் (corionder powder) - 1/2 tbsp 
14. மஞ்சள் தூள் (turmeric powder) - 1/4 tbsp 
15. Tomato ketchup - 2 tbsp 
16. தண்ணீர் (water) - 1 cup 

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில்  pasta, சிறிது உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் நன்கு வேகவைக்கவும். வேகவைத்த pasta வை  வடிகட்டி தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.

பிறகு கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளி, brocolli, காரட், காளான், பச்சை பட்டாணி, Green, Yellow, Red Capsicum, போட்டு வதக்கவும்.

பிறகு  உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்போட்டு நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும், பிறகு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து காய்கறிகள் வெந்த பின்பு  tomato ketchup சேர்க்கவும். இறுதியாக வேகவைத்த pasta வையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது chesse சேர்த்து பின் இரக்கவும்.

சுவையான pasta ரெடி !!!

Sunday, March 1, 2015

அல்வா (Halwa)


தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு (Wheat flour) - 1 cup
2. சக்கரை (Sugar) - 1 cup
3. ஏலக்காய் தூள் (Cardamom ) - 1 tbsp
4. நெய் (Ghee) - 1/2 cup 
5. சோள மாவு (Corn flour) - 2 tbsp
6. உப்பு (Salt) -சிறிதளவு
7. தண்ணீர் (Water) -  2 cup (தேவைகேற்ப)
8. முந்திரி பருப்பு (Cashews) - 10

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். இந்த கலவை ஒரு 2 மணி நேரம் நன்கு ஊற வேண்டும்.

பின் ஒரு வடிகட்டியில் கரைத்து வைத்த கலவையை ஊற்றி வடிகட்டவும்.

ஒரு கடாயில் வடிகட்டிய கலவையை ஊற்றவும், மிதமான தீயில் வைத்து கிளறவும். 

ஒரு 5 நிமிடம் கழித்து சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பின் சோள மாவை சிறது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும். அதன் பின் நெய் ஊற்றி ஒரு 25 நிமிடம் நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து வரும்போது இரக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி முந்திரி பருப்புகளால் அலங்கரிக்கலாம்.

சுவையான அல்வா ரெடி !!!

Rice ball snack


தேவையான பொருட்கள்:

1. சாதம் (Cooked Rice) - 1 cup
2. Sour cream - 2 tbsp
3. Shredded Mozzarella Cheese - 1/2 cup
4. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp
5. உப்பு (Salt) - தேவையான அளவு
6. Bread  crumbs - 1/2 cup 
7. Corn flour - 2 tbsp
8. தண்ணீர் - சிறதளவு
9. எண்ணெய் (Oil) - 1/2 cup 


செய்முறை :



முதலில் ஒரு பாத்திரத்தில் சாதம், Sour cream, Shredded Mozzarella cheese, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். 

வேறு ஒரு பாத்திரத்தில் சிறது தண்ணீர் சேர்த்து Corn flour யை  கலந்து கொள்ளவும். பின் ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து Corn flour இல் முக்கி, Bread crumbs இல் பிரட்டவும்.

பிறகு கடாயில் எண்ணையை காய வைத்து, எண்ணெய் சூடான பிறகு பொரித்து எடுக்கவும்.



சிறுது Shredded cheese தூவி பறிமாறலாம்..



சுவையான Rice ball snack தயார் !!!


Wednesday, February 18, 2015

Beetroot Tikki


தேவையான பொருட்கள் :

1. பீட்ரூட்(Beet root) - 2 (Finely grated)
2. உருளைக்கிழங்கு (Potato) - 2 (Boiled and finely mashed)
3. தேவையான அளவு  உப்பு (Required salt)
4. மிளகாய்  தூள் (Chilli powder) - 1 tbsp
5. வெங்காயம் (Onion)-1 (Finely chopped)
6. கரம் மசாலா(Garam masala) - 1 tbsp 
7. எண்ணெய் (Oil) - 1 cup 
8. மைதா மாவு (All purpose flour) -3 tbsp 
9. Bread  crumbs - 4 tbsp 
10. தண்ணீர் (Water) - 1/4 cup .
11. கொத்தமல்லி தழை - finely chopped 


செய்முறை :

முதலில் துருவிய பீட்ரூட்டுடன் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தழை சேர்த்து  நன்கு பிசைந்து வைத்துகொள்ளவும்.

பிறகு பீட்ரூட்டை எடுத்து நன்கு பிழிந்து மேற்களந்த கலவையில் சேர்த்து பிசையவும். இந்த கலவை ஒரு 2 மணி நேரம் நன்கு ஊறவேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து கொள்ளவும்.

பீட்ரூட் கலவையில் இருந்து சிறிது எடுத்து வட்டமாக தட்டிக்கொள்ளவும். பின்பு மைதாமாவு கலவையில் நினைத்து, பின் ரொட்டி தூள்ளில் (bread crumbs) சிறிது பிரட்டி எடுக்கவும்.

பின்பு சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான Beet Root Tikki ரெடி !!!

Tuesday, February 3, 2015

Mushroom Masala


தேவையான பொருட்கள்:

1. காளான் (Mushroom) - 250 gm (slit into small pieces)
2. வெங்காயம் (Onion) - 1 (finely chopped)
3. தக்காளி சாறு (Tomato puree) - 1/2 cup 
4. பச்சை மிளகாய் (Green chillies)  - 4
5. பூண்டு (Garlic) - 4 (finely  chopped )
6. கரம் மசாலா தூள் (Garam masala powder) - 1 tbsp 
7. கொத்தமல்லி தூள் (Coriander powder) - 2 tbsp 
8. மிளகாய் தூள் (Chilli powder) - 1 tbsp 
9. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/2 tbsp 
10. கடுகு (Mustard ) - 1 tbsp 
11. சீரகம் (Cumin seed)  - 1 tbsp 
12. எண்ணெய் (Oil) - 4 tbsp 
13. வெண்ணெய் (Butter)  - 4 tbsp 
14. மிளகு தூள் (Pepper powder) - 2 tbsp 
15. உப்பு (Salt)  - தேவையான அளவு.
16. இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste)  - 1 tbsp 

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன்  கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் வெங்காயம், 2 பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும். பிறகு  தக்காளி சாறு, கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கவும்.

பின் காளானையும் சேர்த்து, காளான் நன்கு வேகும் வரை வதக்கவும்.(தேவைபட்டால் சிறது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்).

பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதில் பூண்டு, 2 பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து கிளறவும். பின் இவற்றை வேகவைத்த காளான் மசாலாவில் ஊற்றி  கிளறி இரக்கவும்.

சுவையான Mushroom masala ரெடி !!!