Sunday, March 1, 2015

அல்வா (Halwa)


தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு (Wheat flour) - 1 cup
2. சக்கரை (Sugar) - 1 cup
3. ஏலக்காய் தூள் (Cardamom ) - 1 tbsp
4. நெய் (Ghee) - 1/2 cup 
5. சோள மாவு (Corn flour) - 2 tbsp
6. உப்பு (Salt) -சிறிதளவு
7. தண்ணீர் (Water) -  2 cup (தேவைகேற்ப)
8. முந்திரி பருப்பு (Cashews) - 10

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். இந்த கலவை ஒரு 2 மணி நேரம் நன்கு ஊற வேண்டும்.

பின் ஒரு வடிகட்டியில் கரைத்து வைத்த கலவையை ஊற்றி வடிகட்டவும்.

ஒரு கடாயில் வடிகட்டிய கலவையை ஊற்றவும், மிதமான தீயில் வைத்து கிளறவும். 

ஒரு 5 நிமிடம் கழித்து சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பின் சோள மாவை சிறது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும். அதன் பின் நெய் ஊற்றி ஒரு 25 நிமிடம் நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து வரும்போது இரக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி முந்திரி பருப்புகளால் அலங்கரிக்கலாம்.

சுவையான அல்வா ரெடி !!!

No comments:

Post a Comment