தேவையான பொருட்கள்:
1. சாதம் (Cooked Rice) - 1 cup
2. Sour cream - 2 tbsp
3. Shredded Mozzarella Cheese - 1/2 cup
4. மிளகு தூள் (Pepper powder) - 1 tbsp
5. உப்பு (Salt) - தேவையான அளவு
6. Bread crumbs - 1/2 cup
7. Corn flour - 2 tbsp
8. தண்ணீர் - சிறதளவு
9. எண்ணெய் (Oil) - 1/2 cup
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சாதம், Sour cream, Shredded Mozzarella cheese, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் சிறது தண்ணீர் சேர்த்து Corn flour யை கலந்து கொள்ளவும். பின் ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து Corn flour இல் முக்கி, Bread crumbs இல் பிரட்டவும்.
பிறகு கடாயில் எண்ணையை காய வைத்து, எண்ணெய் சூடான பிறகு பொரித்து எடுக்கவும்.
சிறுது Shredded cheese தூவி பறிமாறலாம்..

No comments:
Post a Comment