தேவையான பொருட்கள் :
1. Spaghetti Pasta - 1 cup
2. வெங்காயம் -1 (chopped finely )
3. தக்காளி -2 (chopped finely )
4. தேவையானஅளவு உப்பு (required salt)
5. குடமிளகாய் (Green, Yellow, Red Capsicum / Bell peppers) - தலா 1 (each 1 thinly sliced)
6. எண்ணெய் (oil) - 4 tbsp
7. காளான் (Mushroom) -1/4 cup (thinly sliced )
8. பச்சை பட்டாணி (Green peas) -1/4 cup
9. பாலாடை கட்டி -1/4 cup (shredded Mozzarella cheese)
10. காரட் -1 (chopped finely)
11. Brocolli - 1 cup thinly sliced
12. மிளகாய் தூள் (chilli powder) - 2 tbsp
13. கொத்தமல்லி தூள் (corionder powder) - 1/2 tbsp
14. மஞ்சள் தூள் (turmeric powder) - 1/4 tbsp
15. Tomato ketchup - 2 tbsp
16. தண்ணீர் (water) - 1 cup
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் pasta, சிறிது உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் நன்கு வேகவைக்கவும். வேகவைத்த pasta வை வடிகட்டி தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.
பிறகு கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளி, brocolli, காரட், காளான், பச்சை பட்டாணி, Green, Yellow, Red Capsicum, போட்டு வதக்கவும்.
பிறகு உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்போட்டு நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும், பிறகு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து காய்கறிகள் வெந்த பின்பு tomato ketchup சேர்க்கவும். இறுதியாக வேகவைத்த pasta வையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது chesse சேர்த்து பின் இரக்கவும்.
சுவையான pasta ரெடி !!!

No comments:
Post a Comment