தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு (Rice powder) - 1 கப்
2. வெல்லம் (Jaggery) - 1/2 கப்
3. தண்ணீர் (Water) - 1/4 கப்
4. தேங்காய் (Coconut) - சிறிதளவு (Finely grated)
5. ஏலக்காய் (Cardamom) - 2
6. நெய் (Ghee) - 2 tbsp
செய்முறை:
முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்ல பாகு ஆக காய்த்து வைத்து கொள்ளவும்.(வெல்ல பாகு கெட்டியாக இருக்கவேண்டும்)
அரிசி மாவில் சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும். பின் இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும். புட்டு வெந்தவுடன் வெல்ல பாகு, நெய், ஏலக்காய், தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான புட்டு ரெடி !!!
No comments:
Post a Comment