தேவையான பொருட்கள்:
1. மட்டன் - 500 gm (or 1 lbs)
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 2
3. தக்காளி (Chopped tomato) - 1
4. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 1/2 cup
5. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப (Required green chilli) - 2
6. இஞ்சி - பூண்டு விழுது (Ginger - Garlic paste) - 2 tbsp
7. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 4
8. ஏலக்காய் (Cardamom) - 2
9. கிராம்பு (Cloves) - 3
10. பிரயாணி இலை (Bay leaves) - 3
11. நெய் (Ghee) - 3 tbsp
12. எண்ணெய் (oil) - 3 tbsp
13. மஞ்சள் தூள் (Turmeric powder) - சிறிதளவு
14. மிளகாய் தூள் (Chilli powder) - 1/2 tbsp
15. புதினா (Mint leaves) - 5 tbsp
16. எலுமிச்சை சாறு (Lemon juice) - 2 tbsp
17. உப்பு தேவைக்கேற்ப (Salt required)
செய்முறை:
முதலில் கடாயில் 3 tbsp எண்ணெய் மற்றும் 3 tbsp நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை-பிரயாணி இலை ஆகியவற்றை போடவும். பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன் பின் தக்காளி, புதினா, பச்சை மிளகாய், தயிர் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய மட்டன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா, உப்பு சேர்த்து வதக்கவும் .பின் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு 10 விசிலுக்கு வைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்த பின் அரிசியை போடவும். பின் அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும். அரிசியை ஒரு 50 % வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் குக்கரை திறந்து வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். அதன் பின் 1 tbsp எலுமிச்சை சாறையும் சேர்த்து கலந்த பின் குக்கரை மூடி, அடுப்பை சுமார் 15 நிமிடம் சிமில் (sim) வைத்து எடுத்தால் சுவையான மட்டன் பிரயாணி ரெடி !!
பின் குக்கரை திறந்து வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். அதன் பின் 1 tbsp எலுமிச்சை சாறையும் சேர்த்து கலந்த பின் குக்கரை மூடி, அடுப்பை சுமார் 15 நிமிடம் சிமில் (sim) வைத்து எடுத்தால் சுவையான மட்டன் பிரயாணி ரெடி !!

Can you please give the recipe in English.. That will help me in trying the same.
ReplyDelete