Monday, April 4, 2016

மட்டன் பிரியாணி



தேவையான பொருட்கள்:



1. மட்டன் - 500 gm (or 1 lbs)
2. பெரிய வெங்காயம் (Chopped onion) - 2
3. தக்காளி (Chopped tomato) - 1
4. பாசுமதி அரிசி (Basmati rice) - 1 1/2 cup 
5. பச்சை மிளகாய் தேவைக்கேற்ப  (Required green chilli) - 2
6. இஞ்சி - பூண்டு விழுது  (Ginger - Garlic paste) - 2 tbsp 
7. லவங்கப் பட்டை (Cinnamon stick ) - 4
8. ஏலக்காய் (Cardamom) - 2
9. கிராம்பு (Cloves) - 3
10. பிரயாணி இலை (Bay leaves) - 3
11. நெய் (Ghee) - 3 tbsp 
12. எண்ணெய் (oil) - 3 tbsp 
13. மஞ்சள் தூள் (Turmeric powder) - சிறிதளவு
14. மிளகாய்  தூள் (Chilli powder) - 1/2 tbsp
15. புதினா (Mint leaves) - 5 tbsp 
16. எலுமிச்சை சாறு (Lemon juice) - 2 tbsp 
17. உப்பு தேவைக்கேற்ப (Salt required)


செய்முறை:   

முதலில் கடாயில்  3 tbsp எண்ணெய் மற்றும் 3 tbsp நெய்யை ஊற்றி நன்கு காய்ந்தவுடன், கிராம்பு-ஏலக்காய்-லவங்கப் பட்டை-பிரயாணி இலை ஆகியவற்றை போடவும். பிறகு வெங்காயம்  போட்டு வதக்கவும். 

பின் இஞ்சி பூண்டு  விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன் பின் தக்காளி, புதினா, பச்சை மிளகாய், தயிர்  சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும். இதனுடன் நன்கு சுத்தபடுத்திய மட்டன்  துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். 

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா, உப்பு  சேர்த்து வதக்கவும் .பின் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு 10 விசிலுக்கு வைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்த பின் அரிசியை போடவும். பின் அதனுடன் சிறிது உப்பு  சேர்க்கவும். அரிசியை ஒரு 50 % வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

பின் குக்கரை திறந்து வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். அதன் பின் 1 tbsp எலுமிச்சை சாறையும் சேர்த்து கலந்த பின் குக்கரை மூடி, அடுப்பை சுமார் 15 நிமிடம் சிமில் (sim) வைத்து எடுத்தால் சுவையான மட்டன் பிரயாணி ரெடி !!


1 comment:

  1. Can you please give the recipe in English.. That will help me in trying the same.

    ReplyDelete