Thursday, June 27, 2013

மீன் குழம்பு (Fish curry)



தேவையான பொருட்கள் :

1. தக்காளி (Tomato) - 1
2. சின்ன வெங்காயம் (Sambar onion) - 6
3. வெள்ளைபூண்டு (Garlic) - 4பல் 
4. நல்லெண்ணெய் (Oil) - 4 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (Curry leaves)
6. புளி  (Tamarind) - சிறிதளவு
7. தேவையான அளவு  உப்பு  (required salt)
8. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel seeds) - சிறிதளவு
9. சின்னசீரகம் (Cumin seeds) - சிறிதளவு
10. கடுகு (Mustard) - சிறிதளவு
11. வெந்தயம் (Fenugreek ) -சிறிதளவு 
12. மிளகு (Black  pepper) - சிறிதளவு
13. மீன் (Fish) - 6 துண்டுகள் (6 pieces) 
15. சாம்பார் தூள் (Sambar powder) -3 tbsp 

செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். 

கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 6 ஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சின்னசீரகம் ,வெந்தயம் , மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெள்ளைபூண்டு, அனைத்தையும் 5 நிமிடம் வதக்கி, பின் ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து  ஊற்றவும்.

பின்னர் சாம்பார்தூள் போட்டு 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மீனையும் சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

அருமையான மீன்  குழம்பு ரெடி!!

மீன்  குழம்பை - சாதம், தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...

2 comments:

  1. வாழ்த்துக்கள், வள்ளிமயில். தொடரட்டும் இந்த நல்ல சேவை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா

      Delete