தேவையான பொருட்கள் :
1. தக்காளி (Tomato) - 1
2. சின்ன வெங்காயம் (Sambar onion) - 6
3. வெள்ளைபூண்டு (Garlic) - 4பல்
4. நல்லெண்ணெய் (Oil) - 4 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (Curry leaves)
6. புளி (Tamarind) - சிறிதளவு
7. தேவையான அளவு உப்பு (required salt)
8. சோம்பு/பெருஞ்சீரகம் (Fennel seeds) - சிறிதளவு
9. சின்னசீரகம் (Cumin seeds) - சிறிதளவு
10. கடுகு (Mustard) - சிறிதளவு
11. வெந்தயம் (Fenugreek ) -சிறிதளவு
12. மிளகு (Black pepper) - சிறிதளவு
13. மீன் (Fish) - 6 துண்டுகள் (6 pieces)
15. சாம்பார் தூள் (Sambar powder) -3 tbsp
செய்முறை :
முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும்.
கடாயை (pan ) அடுப்பில் காயவைத்து, 6 ஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சின்னசீரகம் ,வெந்தயம் , மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெள்ளைபூண்டு, அனைத்தையும் 5 நிமிடம் வதக்கி, பின் ஊறவைத்த உப்பு - புளியை கரைத்து ஊற்றவும்.
பின்னர் சாம்பார்தூள் போட்டு 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மீனையும் சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
அருமையான மீன் குழம்பு ரெடி!!
மீன் குழம்பை - சாதம், தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...
வாழ்த்துக்கள், வள்ளிமயில். தொடரட்டும் இந்த நல்ல சேவை!
ReplyDeleteமிக்க நன்றி அண்ணா
Delete