Thursday, June 27, 2013

வெண்டைகாய் பச்சடி


தேவையான பொருட்கள் :

1. சின்ன  வெங்காயம் (Chopped Onion) - 4
2. தக்காளி (Tomato) - 1
3. பச்சை மிளகாய்   (Green Chilli) - 1 
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. புளி (Tamarind) - சிறிதளவு
6. கடுகு (Mustard) - சிறிதளவு
7. உளுத்தம்  பருப்பு  (Urad dhal) - சிறிதளவு
8. துவரம்பருப்பு (Toor dhal) - 1/4 கப்
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (Oil) - 4 tbsp

11. வெண்டைகாய் (Lady's finger / Okra) -10  ( finely chopped )
12. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு


செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும்.

கடாயை (pan) அடுப்பில்  காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்  பருப்பு,  கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெண்டைகாய்  அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்கவும்.

பின் அனைத்தையும் வேகவைத்த பருப்புடன் குக்கரில்  போட்டு, ஊறவைத்த  உப்பு - புளியை கரைத்து ஊற்றவும். பிறகு  குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

கொத்தமல்லிதழைகளால்  அலங்கரிக்கவும். அருமையான  வெண்டைகாய் பச்சடி ரெடி!!


வெண்டைகாய் பச்சடியை  சாதத்துடன் சாப்பிடலாம்

No comments:

Post a Comment