Wednesday, July 23, 2014

தேன்குழல் (முறுக்கு)


தேவையான பொருட்கள்:

1. பச்சரிசி(Long grain rice) - 4 cup

2. உளுந்தம் பருப்பு (Urdhu dhal) - 1 1/2 cup

3. உப்பு (Salt) - தேவையான அளவு

4. எண்ணை (Oil) - 1 cup

5. தண்ணீர் (Water) - 1/2 cup

செய்முறை :

முதலில் கடாயில் உளுந்தம் பருப்பை போட்டு சிறிது சூடு வரும் வரை வறுக்கவும். பின்  பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பையும் சேர்த்து அரைத்து வைத்துகொள்ளவும்.


பின் சிறிது அரைத்து வைத்துள்ள மாவை எடுத்து, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் - முறுக்கு பிழியும் கட்டையில் வைத்து பிழிந்து, நன்கு வெந்தபின் எடுக்கவும்.

சுவையான செட்டிநாடு தேன்குழல்  தயார் !!!

No comments:

Post a Comment