தேவையான பொருட்கள்:
1. All purpose flour - 1 cup
2. கோதுமை மாவு (wheat flour) - 1 cup
3. முட்டை (Egg) -3
4. சர்க்கரை (Sugar) - 1 1/2 cup
5. எண்ணெய் (oil ) - 1/4 cup
6. உப்பு (Salt) - 1/2 tbsp
7. Vanilla extract - 1 tbsp
8. தயிர் (Curd) - 1/4 cup
9. காரட் (carrot ) - 1 cup (finely grated )
10. லவங்கபட்டை தூள் (cinnamon powder ) - 1tbsp
11.Baking cups
12. உலர்ந்த திராட்சை (raisin ) - 1/4 cup
13.Baking powder - 1 tbsp
செய்முறை:
முதலில் Convention oven யை 365'Fக்கு 10 நிமிடம் preheat செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, All purpose flour, உப்பு, லவங்கபட்டை தூள்,Baking powder சேர்த்து கலக்கவும்.
பின் வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,சர்க்கரை சேர்த்து hand mixer இல் நன்கு கலக்கவும். பின் முட்டை சேர்த்து கலக்கவும் (முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்).
அதன் பின் மேலே கலந்த கலவையையும் சேர்க்கவும். பின் Vanilla extract, தயிர் சேர்க்கவும்.
இறுதியாக உலர்ந்த திராட்சை மற்றும் காரட் சேர்க்கவும்.
பின் muffin trayஇல் baking cups வைத்து, மேலே கிளறிய மாவை கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு cup 'யிலும் ஊற்றவும்.
Convention oven இல் 385'F 20 நிமிடம் bake செய்யவும்...
சுவையான carrot muffin ரெடி !!!
No comments:
Post a Comment