தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் - 1 வட்டமாக நறுக்கிகொள்ளவும் (Ring shaped)
2. சோள மாவு (Corn flour) - 3 tbsp
3. மைதா மாவு (All purpose flour) - 3 tbsp
4. உப்பு (Salt) - தேவையான அளவு
5. இஞ்சி,பூண்டு விழுது (Ginger Garlic paste) - 1 tbsp
6. மிளகு தூள் (Pepper powder ) - 1/2 tbsp
7. தண்ணீர் (Water) - 1/4 cup
8. ரொட்டி தூள் (Bread crumbs) - தேவையான அளவு
9. எண்ணெய் (oil) - 1/2 cup
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகு தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு வட்டமாக நறுக்கிவைத்துள்ள வெங்காய துண்டுகளை, கலந்து வைத்துள்ள மாவில் நனைத்து கொண்டு, பின் மாவில் நனைத்து வைத்த வெங்கயா துண்டுகளை ரொட்டி தூளில் (bread crumbs) பிரட்டி எடுத்துகொள்ளவும். பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான Onion Rings ரெடி!!!
No comments:
Post a Comment