தேவையான பொருட்கள்:
1. முட்டை (Egg) - 5 வேகவைத்தது (Boiled & Finely grated)
2. வெங்காயம் (Onion) - 2 (Finely chopped)
3. தக்காளி சாறு (Tomato puree) - 1 cup
4. இலவங்க பட்டை (Cinnamon stick) - 2
5. கிராம்பு (Cloves) - 2
6. ஏலக்காய் (Cardamom) - 1
7. இஞ்சி, பூண்டு விழுது (Ginger, garlic paste) - 2 tbsp
8. பச்சை மிளகாய் (Green chili) - 1 (Finely chopped)
9. மஞ்சள் தூள் (Turmeric powder) - 1/4 tbsp
10. கொத்தமல்லி தூள் (Coriander powder) - 1 tbsp
11. மிளகாய் தூள் (Chili powder) - 1 tbsp
12. உப்பு (Salt) - தேவையான அளவு
13. கரம் மசாலா (Garam masala) - 1/2 tbsp
14. தண்ணீர் (Water) - 1/2 cup (அல்லது தேவையான அளவு)
15. கொத்தமல்லி இழை - 2 tbsp
16. எண்ணெய் (oil) - 4 tbsp
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி - காய்ந்தவுடன் இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து லேசாக வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஒரு 10 நிமிடம் நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், தக்காளி சாறு சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு துருவிய முட்டை, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியாக கரம் மசாலா சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்கவிடவும். சிறிது கொத்தமல்லி இழைகளால் அலங்கரிக்கவும்.
சுவையான Egg Kheema ரெடி!!!
No comments:
Post a Comment