Thursday, May 30, 2013

வாழைப்பூ வடை


தேவையான பொருட்கள் :

1. துவரம் பருப்பு(Toor dhal )  -1/2 கப்
2. கடலை பருப்பு (Bengal gram) - 1/2 கப்
3. வாழைப்பூ - சிறியது 1 (finely chopped )
4. சின்ன வெங்காயம் - 10 (finely chopped)
5. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
6. இஞ்சி (ginger) - சிறிதளவு
7. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves - finely chopped)
8. கொத்தமல்லி  சிறிதளவு (coriander/cilantro leaves - finely chopped)
9. வரமிளகாய் (red chilli)- 1
10. எண்ணெய் (oil) - 2 cup
11. உப்பு (salt)- தேவையான அளவு 

செய்முறை : 

துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை ஊறவைத்து கொள்ளவும் .

பிறகு மிக்ஸ்யில்  ஊறவைத்த பருப்புகள், சோம்பு, இஞ்சி, வரமிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.

பின் அரைத்த கலவையில் வாழைப்பூ, சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில்  காயவைத்து, 2 கப் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 
சிறிது மாவை எடுத்து கொண்டு சிறிதாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும் .

சுவையான வாழைப்பூ வடை ரெடி !!!
 

No comments:

Post a Comment