Tuesday, May 31, 2016

புடலங்காய் வடை



தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் (1 - பொடியாக நறுக்கியது )
2. துவரம் பருப்பு (1/2 - கப்)
3. கடலை பருப்பு (1/2 - கப்)
4. வெங்காயம் (1 - பொடியாக நறுக்கியது )
5. கறிவேப்பில்லை (சிறிதளவு - பொடியாக நறுக்கியது )
6. கொத்தமல்லி (சிறிதளவு - பொடியாக நறுக்கியது )
7. இஞ்சி (சிறிதளவு - பொடியாக நறுக்கியது )
8. சோம்பு (1 - tbsp )
9. வரமிளகாய் (3)
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - 1/2 cup

செய்முறை:


முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின் மிக்சியில் ஊறவைத்த பருப்பு, இஞ்சி, சோம்பு, வரமிளகாய், உப்பு சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள மாவில் புடலங்காய், வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின் மாவை எடுத்து சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான புடலங்ககாய் வடை தயார் !!!


2 comments:

  1. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.கண்டிப்பாக எழுதுகிறேன்.

      Delete